உ.பி.,யில் எரிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்

Added : டிச 07, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : உத்தர பிரதேசத்தில், கொடூர கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட பெண், டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். உ.பி., மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை, கடந்தாண்டு டிசம்பரில், சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும், பின், ஜாமினில்
 உ.பி.,யில் எரிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்

புதுடில்லி : உத்தர பிரதேசத்தில், கொடூர கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட பெண், டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உ.பி., மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை, கடந்தாண்டு டிசம்பரில், சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும், பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


வழி மறிப்பு



இந்த வழக்கின் விசாரணை, ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராவதற்காக, பாதிக்கப்பட்ட பெண், நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு சென்றார். அப்போது, அவரை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும், மேலும் மூன்று பேருடன் சேர்ந்து வழி மறித்தனர். அந்த பெண் மீது, பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். 24 மணி நேரத்துக்குள், குற்றவாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

படுகாயம் அடைந்த அந்தப் பெண், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின், அந்தப் பெண் விமானம் மூலமாக, டில்லி அழைத்து வரப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


சிறப்பு குழு


சிகிச்சை அளித்த டாக்டர் சலாப் குமார் கூறியதாவது:அந்த பெண்ணுக்கு, 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில், சிறப்பு பிரிவில் உள்ள அறையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, உ.பி., முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத், ஐந்து பேர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்துள்ளார்.

விசாரணை குழு தலைவர் முகேஷ் மேஷ்ராம் கூறுகையில், ''தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்,'' என்றார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், உன்னாவில், கடை நடத்தி வருகிறார். தனக்கு, பாலியல் பலாத்கார குற்றவாளி சிவம் திரிவேதியின் உறவினர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக, போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததாக மருத்துவனை அறிவித்துள்ளது.


'கத்தியால் குத்தினர்;பெட்ரோல் ஊற்றினர்'


தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:ரேபரேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதற்காக அதிகாலையில் வந்தேன். அப்போது, சிவம் உள்ளிட்ட ஐந்து பேர், அங்கு நின்றிருந்தனர். என்னை பார்த்ததும், வேகமாக ஓடி வந்து தாக்கினர். சிறிய கத்தியால், என் தோளில் குத்தினர். கீழே விழுந்ததும், என் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். என் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உதவிக்காக வந்தனர். இதையடுத்து, ஐந்து பேரும் தப்பி ஓடி விட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
07-டிச-201911:30:40 IST Report Abuse
P.Sekaran கருத்து தெரிவித்தால் நமக்கும் இது மாதிரி நடந்துவிடும். தேவையில்லாமல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X