ஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (48)
Advertisement
ஐதராபாத் என்கவுன்டர்: தெலுங்கானா அரசு,உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐதாரபாத் : தெலுங்கானா மாநிலத்தில் சம்ஷாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் மருத்துவரை இரவு பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி தொழிலாளர்கள் நான்கு பேர் அவரிடம் வந்து உதவுவது போல் நடித்து அருகில் உள்ள மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்தனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் சம்பவ இடத்தி்ற்கு போலீசார் அழைத்துச்சென்ற போது தப்பியோட முயன்ற நான்கு பேரையும் சுட்டுக்கொன்றனர். அவர்களின் உடல் மெகபூபா நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.




இது தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், தெலுங்கான அரசுக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை நடத்தி அவற்றை வீடியோவாக பதிவு செய்து வீடியோ ஆதாரத்தை மெகபூபா நகர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்க வேண்டும். டிச.9-ம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
08-டிச-201909:44:35 IST Report Abuse
spr இங்கு பதிவிடப்படும் கருத்துக்கள் நீதிபதிகளுக்கு நல்ல அறிவுரை அவர்கள் இதனை விரும்பாவிட்டாலும் தங்களைக் குறித்த சமுதாய மதிப்பீடுகள் குறைந்து வருகிறது என்று புரிந்து கொண்டு அதற்குத் தக்க வகையில், தங்கள் செயல்பாட்டினை மாற்றியமைத்துக் கொண்டால் நலம் எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றம் ஹால்லுபடி செய்யக்கூடாது ஆதாரங்கள் சரியான வகையில் சமர்ப்பிக்காவிடில் அல்லது விசாரணை முறையாக இல்லையென்று நினைத்தாலும் அவற்றை சரிவர நடத்திக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென மட்டுமே காவற்துறை மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் அப்படி இயலாவிடின், அந்த விசாரணை அமைப்பு மட்டுமே தங்கள் இயலாமையைக் குறிப்பிட்டு, வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் அதன்படி அந்த அதிகாரிகள் மேல் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
07-டிச-201921:52:23 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கோர்ட் வக்கீல் நீதிஅரசர் பிழைப்பை கெடுத்துவிட்டபடியால் அவர்கள் இப்படியாவது வழக்கை வைத்து ஓட்டலாம் காலம் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் போல... இனி கோர்ட் கச்சேரின்னு போகக்கூடாதுங்க இப்படி கண்ட இடத்தில் சுட்டு தள்ளனும் அப்போதான் எல்லாம் சரிபடும் .கோர்ட் வாய்தா சாப்பாடு மருத்துவம் பாதுகாப்பு என்று குற்றம் செய்துள்ளவனுக்கு சாதகமாக செயல்படும் சட்டம் நீதி எல்லாம் வீண்தான் இதனால் குற்றம் அதிகரிக்கிறதே தவிர குரையல . ஆதலால் இப்படி சுட்டஉ தள்ளினா மக்களில் களை எடுப்பதுபோல் ஆகி நாடு நலம் எய்தும் .
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201919:54:02 IST Report Abuse
ஆப்பு ஜட்ஜ் பொழைப்புல மண்ண அள்ளிப் போட்ட மாதிரி இருக்கு. அவிங்க கிட்டே கேஸ் போயிருந்தா ஆறிப்போன டீயை ஆத்துற மாதிரி நாலு வருஷம் ஆத்தி ஆதாரம் இல்லை, டாக்டர் தன்னைத்தானே எரிச்சிக்கிட்டாருன்னு சொல்லி நாலு பேரையும் விடுதலை செஞ்சிருப்பாங்க. கனியும், கார்த்தியும் நீதி வென்றதுன்னு பாராட்டியிருப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X