அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான கால அளவை உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி நீட்டித்து ஊழலில் ஈடுபட்ட புகாரில் சிக்கினார்.






இச்சம்பவம் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பார்க்கப்படுகிறது. சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது. 2017-18ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. ஆனால் இந்த உத்தரவு வெளியான சில நாட்களுக்கு பிறகு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி சுக்லா லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த உத்தரவில் மாற்றங்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.





இது பற்றி வந்த புகாரையடுத்து உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட, நீதிபதிகள் குழு, 2017ம் ஆண்டில் கொடுத்த அறிக்கையில், சுக்லா மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்தது.


தலைமை நீதிபதி கடிதம்


இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இவரை நீக்க பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வருமாறு அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.


தலைமை நீதிபதி அனுமதி



இதற்கிடையில் சிட்டிங் நீதிபதி மீது தலைமை நீதிபதியின் அனுமதியின்றி சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது என்பது சட்டம். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து சுக்லா மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்தார்.


இரு பிரிவுகளில் வழக்கு


நீதிபதி மீது வழக்கு இதன் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி வேலைகளில் ஈடுபட்டது, பதவியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பதவி விலக மறுப்பு


முன்னதாக பதவி விலகுமாறு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்திய நிலையில், சுக்லா பதவி விலக மறுத்தார். இதையடுத்து, 2018 ல் நீதித்துறை பணிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. பெயருக்கு மட்டுமே அவர் நீதிபதியாக இருக்கிறார். அவரை பதவியில் இருந்து விலக்க பார்லிமென்டில் வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201919:57:11 IST Report Abuse
Pasupathi Subbian அர்த்த பழசான சட்டங்கள் அதில் மாபெரும் ஓட்டைகள். புரிந்தவர்கள் புகுந்து விளையாடி கல்லா கட்டுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
07-டிச-201918:29:25 IST Report Abuse
Swaminathan Chandramouli கூடிய சீக்கிரம் 2g வழக்கை விசாரணைக்கு கொண்டுவரவேண்டும் இந்த முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பக்கூடாது நல்லவேளை ஓபி சைனி ஒய்வு பெற்றுவிட்டார் இல்லையெனில் ஆண்டியும் கனியும் தப்பிவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
07-டிச-201918:04:56 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த நீதிபதி மட்டுமல்ல . நீதி துறையை சேர்ந்த எந்த வக்கீலும் நம் நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல . நம் நாட்டு சட்டங்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது .. வழக்கறிஞர்களோ நீதிபதியோ எப்போதாவது எந்த வழக்கிலாவது தண்டனை பெற்று இருக்கிறார்களா . கர்ணனுக்கு தண்டனை கிடைத்தது அவர் நீதிபதிகளை எதிர்த்தார் அதனால்.. தமிழக முன்னாள் உயர் மன்ற நீதிபதியின் வழக்கு என்ன ஆனது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X