ஜார்க்கண்டில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (5)
Advertisement
  ஜார்க்கண்ட், 2ம் கட்ட தேர்தல்  இன்று ஓட்டுப்பதிவு

இந்த செய்தியை கேட்க

ராஞ்சி: ஜார்க்கண்டில், இரண்டாம் கட்டமாக, 20 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று(டிச.,7) தேர்தல் துவங்கி நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 45.03 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 81 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக, நவ., 30ல், 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இன்று, இரண்டாம் கட்ட மாக, 20 தொகுதிகளில், ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில், மொத்தம், 47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவையொட்டி, மத்திய துணை ராணுவப் படை, போலீசார் உட்பட, 42 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





இன்று நடைபெறும் தேர்தலில், முதல்வர் ரகுபர்தாஸ், கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலும், சபாநாயகர் தினேஷ் ஓரான், சிசாய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மாநில பா.ஜ., தலைவர், லஷ்மண் கிலா, சக்ரதார்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.ஜார்க்கண்டில், பா.ஜ., கூட்டணியை எதிர்த்து, காங்., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி மோதுகிற. இக்கட்சிகள் தவிர, பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்., ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிறிய கட்சிகளும் களத்தில் உள்ளன. ஐந்தாம் கட்ட, இறுதி ஓட்டுப்பதிவு, வரும், 20ல் நடைபெற உள்ளது. ஓட்டுகள், 23ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201912:22:37 IST Report Abuse
Bhaskaran ..கட்சிக்கு கொஞ்சம் ஜெயிச்சு பேர்வந்தாலும் போதும் ஆட்சி அவிங்கதான் .விலைபோகும்( அரசியல் ) வியாதிகள் இருக்கும்வரை இதுதான் பாரதத்தின் தலையெழுத்து
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201918:31:12 IST Report Abuse
நக்கல் தேசவிரோதிகள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
07-டிச-201916:10:55 IST Report Abuse
மூல பத்திரம் மக்களே மீண்டும் போலி மத சார்பின்மை ஆட்சி வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X