பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு வெங்காயம் ஜனவரியில் இறக்குமதி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (22)
Advertisement
வெளிநாட்டு வெங்காயம், ஜனவரி, இறக்குமதி, தாதாராவ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ''வரும் ஜனவரியில், வெளிநாட்டு வெங்காயம் இறக்குமதி ஆகும்,'' என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், தாதாராவ், ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:பருவம் தவறிய மழை மற்றும் தொடர்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை வினியோகித்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன், பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், ஜனவரியில் வெங்காயம் இறக்குமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





உள்நாட்டில், சமையல் எண்ணெய் உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமையல் எண்ணெய் தேவையில், உள்நாட்டு உற்பத்தி வாயிலாக, 40 சதவீதம்; இறக்குமதி வாயிலாக, 60 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-டிச-201905:22:24 IST Report Abuse
meenakshisundaram அப்போ நம்ம தமிழகத்திலே உள்ளூராட்சி தேர்தல January வரை தள்ளிப்பட வேண்டும் என்று திமுக வழக்கு போடுமா?ஏனெறால் அது 'பிரியாணிகட்சி ஆச்சே ?
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
07-டிச-201919:57:31 IST Report Abuse
Kumar periyaar விவசாய நாட்டிலே விவசாய பொருள்கள் இறக்குமதி ஆட்சி செய்பவர் சரி இல்லையென்றால் இப்படி தான் பிறகு அரிசியும் இறக்குமதியாகும் காலம் வர வைத்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
07-டிச-201916:31:52 IST Report Abuse
Rajas எந்த ஜனவரி என்று சொல்லவேயில்லயே. என்ன சுறுசுறுப்பான ஆட்சியாளர்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து யோசித்து யோசித்து இங்கேயே பயிர் முடிந்து அறுவடைக்கு வரும் போது வாங்குகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X