சட்டசபை இருக்கை அமைப்புகளில் தலைகீழ் மாற்றம்

Updated : மே 20, 2011 | Added : மே 18, 2011 | கருத்துகள் (44) | |
Advertisement
கோட்டையில் புதுப்பிக்கப்படும் தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி வரிசையில் ஆளுங்கட்சி அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சபாநாயகர் இருக்கையும் எதிர்புறத்துக்கு மாற்றப்படுகிறது. தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரே மேஜை தான் முன்னர் இருந்தது. இதனால், மிக அருகிலேயே இரு தரப்பினரும் பேசிக் கொள்ள வாய்ப்பு இருந்தது. இந்த வசதி, சில

கோட்டையில் புதுப்பிக்கப்படும் தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி வரிசையில் ஆளுங்கட்சி அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சபாநாயகர் இருக்கையும் எதிர்புறத்துக்கு மாற்றப்படுகிறது.

தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரே மேஜை தான் முன்னர் இருந்தது. இதனால், மிக அருகிலேயே இரு தரப்பினரும் பேசிக் கொள்ள வாய்ப்பு இருந்தது. இந்த வசதி, சில சமயங்களில் பிரச்னைகளுக்கும் காரணமானது. 1996 - 01ல் தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்திருந்த தாமரைக்கனி, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மூக்கில் குத்தினார். அதேபோல, 1989ல் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா அதை தடுத்ததால், கைகலப்பு ஏற்பட்டு, ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டார். இதன் பின், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் நடந்த முதல் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் காரணமாக, சட்டசபையில் இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டன. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி விடப்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள், ஆளுங்கட்சி வரிசைக்கு வர முடியாதபடி இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக, சட்டசபைக்குள் அனைவருக்கும் இருக்கை அளிக்க முடியாமல், வெளியே, "லாபி' வரை இருக்கைகள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே இருந்ததால், அவர்கள் பேசும் போது, "மைக்' ஆபரேட்டர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. இதற்காக, அங்கு கேமராக்கள் வைக்கப்பட்டு, அதை பார்த்து, அவர்களுக்கு "மைக்' இணைப்பு கொடுக்கப்பட்டது.


இவ்வளவு மாற்றங்களுக்கு பிறகும், புதிய சட்டசபை வளாகம் அமைக்கப்பட்டது. அதனால், இங்கிருந்த சட்டசபை செயலகம் அங்கு மாற்றப்பட்டது. கோட்டையில் இருந்த சட்டசபையில், இருக்கைகள் அகற்றப்பட்டு, தரை சமமாக்கப்பட்டு, செம்மொழி நூலகமாக மாற்றப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தவுடன், கோட்டையில் உள்ள பழைய சட்டசபையிலேயே கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த சட்டசபையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வாறு புதுப்பிக்கும் போது, 2006க்கு முன் இருந்த முறைப்படியே, இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ஆளுங்கட்சி வரிசைக்கும், எதிர்க்கட்சி வரிசைக்கும் இடையேயான இடைவெளி பழையபடி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மற்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சபாநாயகர் இருக்கையை, ஏற்கனவே இருந்த இடத்துக்கு எதிர்புறத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கை வடக்கு பார்த்து முதலில் இருந்தது. அதை மாற்றி, தெற்கு பார்த்து தற்போது வைக்கப்படுகிறது. எப்போதும், சபாநாயகருக்கு வலது கை பக்கம் தான், ஆளுங்கட்சி வரிசை இருக்கும். சபாநாயகர் இருக்கைக்கு வலது பக்கம் உள்ள ஆளுங்கட்சி வரிசையின் முதல் இருக்கையில் முதல்வருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதன்படி, தற்போது சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு மாற்றப்படுவதால், ஆளுங்கட்சி வரிசையும் எதிர்புறத்துக்கு மாறுகிறது. அதாவது, முன்னர் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த வரிசை, தற்போது ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த வரிசையில் முதல் இடம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்படுகிறது. முந்தைய சட்டசபையில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு, தனிப் பெரும்பான்மை இல்லாததால், ஆளுங்கட்சி வரிசையில், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 150 உறுப்பினர்கள் உள்ளதால், இவர்களில், சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்படும்.


சபாநாயகர் இருக்கையின் வரலாறு: கோட்டையில் உள்ள சபாநாயகர் இருக்கை, கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் பரிசாக அளிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் அன்று காலை 11.05 மணிக்கு நிறைவேற்றப்பட்ட போது, இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சபை தலைவராக ராஜாஜி இருந்தார். சபாநாயகரின் இருக்கை எட்டு அடி உயரம் கொண்டது. சிறந்த தேக்கு மரத்தால் ஆனது. கலை நுணுக்கம் மிகுந்த இந்த இருக்கையில், அமரும் தலைவர் சில ரகசிய தாள்களை வைத்துக் கொள்ளவும், எழுதிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டசபை வளாகம் அமைத்தபோது, இந்த இருக்கையை அங்கு கொண்டு செல்லாமல், அதே மாதிரியான தோற்றம் கொண்ட புதிய இருக்கை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


- நமது சிறப்பு நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rendumkettaan - Chennai,இந்தியா
19-மே-201115:50:33 IST Report Abuse
Rendumkettaan முதல்வரம்மாவுக்கு ஒரு யோசனை.. பேசாம எல்லா எதிர்கட்சி காரனுங்க இருக்கைகளையும் தலைகீழா கட்டி தொங்க விட்டுட்டு அதுல ஏறி உட்காருங்கடான்னு சொல்லி ரசிக்கலாம். அஞ்சு வருஷம் நல்லா டைம் பாசாகும் உங்களுக்கு.
Rate this:
Cancel
kannan - cuddalore,இந்தியா
19-மே-201115:32:26 IST Report Abuse
kannan புதிய சட்டமன்ற கட்டிடம் ஒரு நபரின் எதேச்சதிகார முடிவால் உருவாக்கப்பட்டது. முழுதும் முடிக்காமலேயே அதே நபரின் தனிப்பட்ட விருப்பத்தால் இரண்டு கோடி வீண் செலவில் பொய்யான மேற்கூரை போட்டு அவசர அவசர மாக திறப்பு விழா நடத்தப்பட்டது.புதிய முதல்வர் சொல்லிய கருதுக்காகவே பழைய சட்டமன்ற இருக்கைகள் ஒரே இரவில் பெயர்த்து எடுக்கப்பட்டு செம்மொழி பெயரில் நூலகம் என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அரசுப்பணம் செலவானதை காட்டிலும் இப்பொழுது செலவிடப்படுவது அதிகம் இல்லை. ஒரு தனிமனிதனின் அவசரத்தால் எவ்வளவு வீண் ? பழைய கட்டிட இருக்கைகளை சேதமாக்காமல் இருந்தால் என்ன ? அம்மாவின் பேச்சுக்கு இப்படி செயல்பட்டு அரசு பணத்தை வீணடித்த செயலுக்கு என்ன சொல்கிறீர்கள்? பாரம்பரிய சின்னமாக அதை வைத்திருந்தால் நிச்சயம் அம்மா புதிய கட்டிடத்தை முழுமைபடுத்தி பயன் படுத்தியிருப்பார்கள்!
Rate this:
Cancel
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
19-மே-201115:30:55 IST Report Abuse
Abu Faheem என்ன நடக்குது நாட்டுலே. நாங்க அப்பாவி மக்கள். தெருவுல ஒண்ணுமே புரியலே தமிழகத்துல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X