உ.பி., மக்களுக்காக போராட்டம் நடத்த ராகுல் சபதம்

Updated : மே 20, 2011 | Added : மே 18, 2011 | கருத்துகள் (17) | |
Advertisement
வாரணாசி: "பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை அகற்றுவதற்காக, உ.பி., மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, சாதாரண மக்களின் பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்துவோம்' என, காங்., பொதுச் செயலர் ராகுல், ஆவேசமாக பேசினார். உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்த, காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில், காங்., பொதுச் செயலர் ராகுல் பேசியதாவது: உ.பி.,யில், நொய்டா அருகில் உள்ள பட்டா

வாரணாசி: "பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை அகற்றுவதற்காக, உ.பி., மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, சாதாரண மக்களின் பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்துவோம்' என, காங்., பொதுச் செயலர் ராகுல், ஆவேசமாக பேசினார்.


உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்த, காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில், காங்., பொதுச் செயலர் ராகுல் பேசியதாவது: உ.பி.,யில், நொய்டா அருகில் உள்ள பட்டா பர்சவுல் கிராமத்தில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, போலீசார் பயங்கர தாக்குதல் நடத்தினர். பெண்களும் இதில் பாதிக்கப்பட்டனர். இதனால், அந்த கிராமத்தில் இருந்த விவசாயிகள் வெளியேறி விட்டனர். விவசாயிகளின் வீடுகள், தீவைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக, சில புகைப்படங்களை நான் வெளியிட்டேன். ஆனால், மாயாவதி அரசு, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், பட்டா பர்சவுல் கிராமத்தில் அமைதி நிலவுவதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதி நிலவினால், எதற்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வசித்த மக்கள் ஏன், வேறு பகுதிகளில் தலைமறைவாக வாழ்கின்றனர். அங்கு அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றால், அந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்.


விவசாயிகள் பிரச்னையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக என்னிடம் கூறினர். உ.பி.,யில் பகுஜன் சமாஜ் ஆட்சியை அகற்றுவதற்காக, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, சாதாரண மக்களின் பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் போராட்டம் நடத்தும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்துக்காக போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு ராகுல் பேசினார்.


இதற்கிடையே, நொய்டா விவசாயிகள் பிரச்னை குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், "நொய்டாவில் நடந்த போலீஸ் தாக்குதல் சம்பவத்தின் உண்மை நிலையை அறிவதற்காக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவினர், அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். ராஷ்டிரிய லோக்தள கட்சித் தலைவர் அஜித் சிங் கூறுகையில், "நொய்டாவில் விவசாயிகள் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, ஆதாரம் இருப்பதாக, ராகுல் கூறியுள்ளார். லோக்சபா எம்.பி., என்ற முறையில், அவரின் கருத்துக்கு மதிப்பு அளித்து, நொய்டா சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.


நீதி விசாரணை தேவை: பட்டா பர்சவுல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், நொய்டா அருகே உள்ள பட்டா பர்சவுல் கிரா மத்தில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் விவகாரம் தொடர் பாக, விவசாயிகள் மீது தடியடி, துப் பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. இதில் சில விவசாயிகள் இறந் தனர்; ஏராளமானோர் காயமடைந் தனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni shiva - New Delhi,இந்தியா
19-மே-201115:14:54 IST Report Abuse
agni shiva அப்பாடா பயந்தே போய் விட்டிருந்தேன் எங்கே சபதம் செய்யாமல் போய் விடுவாரோ என்று. நல்ல வேளை சபதம் செய்து விட்டார். சபதம் செய்து தான் பீகாரில் கழுதையாக இருந்த காங்கிரஸ் யை கட்டெறும்பு ஆக்கியும் தமிழ் நாட்டில் சபதம் போட்டு காங்கிரஸ் யை தலை இல்லாத முண்டம் ஆக்கியும் காண்பித்த அரசியல் அறிவாளி, எளவு அரசன் ராகுல். தற்போது உத்திர பிரதேச முறை. எப்படியும் காங்கிரஸ் கட்சிக்கு பாடை தயாராகி விடும். சங்கு ஊததான் பாக்கி.ஜல்தி ஜல்தி.
Rate this:
Cancel
Selva Raagava Murthi - Delhi,இந்தியா
19-மே-201112:56:38 IST Report Abuse
Selva Raagava Murthi அரசியல் பற்றி உனக்கு ஒரு மன்னாங்கட்டியும் தெரியாது. எதோ நேரு தயவில உங்க குடுப்பம் உச்சில தொங்குது. ஜாக்கிரத இருங்க அறுந்து கீழ விழ போது.
Rate this:
Cancel
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
19-மே-201112:37:22 IST Report Abuse
Nallavan Nallavan கொழந்த, எண்ட சக்கரே...நீ பேசாம போய்க் குந்து நைனா..அதுவே போதும்! ஒரு ஆணியும் நீ புடுங்க வேணாம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X