பொது செய்தி

இந்தியா

வங்கி துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு: பிரதமர்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (34)
Advertisement
வங்கித்துறை, பிரச்னைகள், பிரதமர் மோடி, மத்திய அரசு, பா.ஜ., பாஜ,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கடந்த காலங்களில் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகள், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் தீர்ந்துவிட்டதாகவும், அதிகாரிகள், பயமின்றி, நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த கால அரசுகளின் தவறான செயல்களால் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி எழுந்தது. வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சமின்றி அனைத்து ஊழியர்களும் உறுதியாக பணியாற்ற வேண்டும். வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையால், வங்கிகளுக்கு இருந்த நெருக்கடியான காலம் முடிவுக்கு வந்துவிட்டது. வங்கிகளின் மறுசீரமைப்புக்காக மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. தீர்ப்பாயங்கள் மூலம், சுமார் ரூ.3 லட்சம் கோடி கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிலையை விட வங்கிகளின் தொழில் தற்போது மிகச்சிறந்தமுன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்துவிட்டோம் என அனைத்து வங்கி ஊழியர்களிடமும் தெரிவித்து கொள்கிறேன்.

வர்த்தகம் தொடர்பாக இனி எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லை. திறமையான முடிவுகளை எடுக்கும் வகையில், வங்கிகளை பாதுகாக்கும் விதமாக, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். ஒரு அதிகாரி, முடிவு எடுக்க தயங்கினால், அதனை செயல்படுத்த தயங்குவார். இதனால், அவருக்கு அரசு உதவும். அரசே, பொறுப்பேற்று கொள்ளும். நான் பொறுப்பேற்று கொள்கிறேன். இதன் மூலம் தான் அரசு வளர்ச்சி பெறும். வங்கி அதிகாரிகள் முக்கிய முடிவை எடுக்கும் முன்னர், அதனை வங்கி அல்லது நிதித்துறை நிபுணர் ஆராய்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும்.
''ஒவ்வொருவரின் வளர்ச்சி, எல்லாரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை'' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்பட்டதால் தான் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றது. தற்போதுள்ள சவால்களை, சிறந்த எதிர்காலமாக மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது அரசியல் ரீதியில் கடினமானது. ஆனால், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களுக்கு சிறந்து எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முத்தலாக் ரத்து முடிவு லட்சகணக்கான குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை எற்படுத்தியுள்ளது.ராமஜென்மபூமி விவகாரத்தில் கிடைத்த அமைதியான தீர்வு, சாதாரணமான தீர்வு இல்லை. சிறந்த எதிர்காலத்திற்கானது. இந்த தீர்ப்பிற்கு முன்னர் பல அச்சங்கள் வெளியாகின. ஆனால், அந்த சந்தேகங்களை மக்கள் முற்றிலும் நிராகரித்தனர். சிறந்த எதிர்காலம் குறித்த மக்களின் எண்ணம் முக்கியமானதாக இருந்தது.

கடந்த காலங்களில், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அரசின் கவனம் செல்லவில்லை. பலவீனமான அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் அரசின் கண்காணிப்பு இல்லாமல் இருந்தனர். இதனால், வளர்ச்சி என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. ஆனால், எனது அரசு, அம்மாவட்ட மக்களின் நம்பிக்கைகளை கவனத்தில் கொண்டது பொறுப்புடன் செயல்பட்டு வரும் தனது அரசு, மிகச்சிறந்த வளமான எதிர்காலத்தை நோக்கி, செல்கிறது. தொழில்புரியும் தகுதி படைத்த நாடுகளின் தரவரிசையில் இந்தியா 70 இடங்களுக்கு முன்னேறியுள்ளது. . இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-201922:37:43 IST Report Abuse
Rafi பிரச்சனையின் விபரீதத்தை தான் இவ்வளவு நாட்களாக வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி கொண்டிருக்கின்றார். அவருடைய கட்சி மட்டும் கொளுத்திருப்பதை தான் வளர்ச்சியாக பார்க்கின்றார். மக்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதும், பல நிறுவனங்கள் வேலையிலிருந்து ஆட்களை விடுவிப்பதும், இவருக்கு யாரும் கொண்டு சேர்ப்பதில்லை, அவர் தான் நாட்டில் இல்லையே என்று மக்கள் இவ்விஷயத்தில் அலச்சியம்மாக இருக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
07-டிச-201921:49:40 IST Report Abuse
Charles ஒரு விஷயத்தில் மோடிஜி மிகவும் சரி. நான் 1975 வருஷம் ஒரு பெரிய வங்கியின் கிளைகளை கணக்காய்வு செய்தேன். உள்ளே கண்டது மிக அதிர்ச்சியை அளித்தது. பல கோடி கடன் நிலத்தின் பேரில் கொடுக்கப்பட்டிருந்தது ஆனால் கடன் வாங்கியவர்களுக்கு அந்த நிலமே சொந்தம் இல்லை அல்லது சொந்தக்காரரின் அனுமதியோ இல்லை பம்ப் பார்க்காமல் வெறும் வேற்று பில் மேலே கடன் கொடுத்திருந்தார்கள். பெரும் தொழிற்சாலைகள் கடன் தவணைகளை பல வருஷங்கள் செலுத்திவிட்டாலும் அதை நம்பகரமான கடனாய் கணக்கில் காட்டியிருந்தார்கள். நாங்கள் கொடுத்த ரிப்போர்ட் குப்பையில் போட்டது reserve வங்கி ஆனால் எங்களை அடுத்த வருஷம் ஆய்வாளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் நடந்தது.இப்படி பலவருஷம் வங்கிகள் கொள்ளை அடித்தாகிவிட்டால் அந்த வங்கியில் என்ன கடைசியில் தேறும்
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
08-டிச-201905:06:02 IST Report Abuse
selvaஅப்ப அந்த ரிஸ்க் ரேட்டிங் ஆஃபீஸ்ர், தூக்கி உள்ள வைங்க , பாஸ் என்ன ஒரு கண்டுபிடிப்பு...
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-டிச-201920:25:02 IST Report Abuse
Darmavan என்ன நடந்து விட்டது என்ற விவரம் இல்லை.
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
08-டிச-201905:07:04 IST Report Abuse
selvaஅதெல்லாம் கேட்க படாது, தேஷ் துரோகி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X