பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மாலை உள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை?

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (5)
Advertisement
உள்ளாட்சி தேர்தல், மாநில தேர்தல் ஆணையம், ரத்து

இந்த செய்தியை கேட்க

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில்,ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும், கடந்த2 ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், ' இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்ய வேண்டும். அதன் பின்னரே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் ' என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி வழங்கியது.






இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதற்கான சட்டப்பூர்வ ஆணையை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைய செயலர் சுப்ரமணியன், தேர்தல் நடத்தும் அலுவலர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.





இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணையை தமிழக தேர்தல் கமிஷன் இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-டிச-201915:19:43 IST Report Abuse
இந்தியன் kumar நடக்கட்டும் நடக்கட்டும் சீக்கிரம் நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
07-டிச-201913:04:59 IST Report Abuse
oce சட்ட மன்றம் கிடைக்கல. ஊராட்சியில் நுழைந்தாலாவது நாலு காசு பார்க்கலாம். அதிமுக சூப்பர் கட்சி.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
07-டிச-201912:11:11 IST Report Abuse
நக்கீரன் சபாஷ்...உள்ளாட்சி தேர்தலை தனது நரித்தனமான தந்திரத்தால் நிறுத்திய அரசுக்கு. இதெல்லாம் ஒரு பொழப்பு... அரசியல்வாதிகளின் சுயநலத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமலேயே இந்த ஆட்சி முடிவு பெறப்போகிறது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? இதற்க்கெல்லாம் யார் பொறுப்பு? யாருமில்லை என்றால் அது எவ்வளவு பெரிய கேவலம். இதை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை அல்லது கேள்வி கேட்கவில்லை என்பது எவ்வளவு பெரிய அவமானம்? அரசும் நீதித்துறையும் கூட்டு சேர்ந்து கொண்டு நடத்தும் நாடகங்களை மக்கள் புரியாமலில்லை. ஆனால், இதை போன்ற அவலங்களை சகித்துக்கொண்டு செல்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியுமில்லை. இதெல்லாம் ஜனநாயகமா? மோடிஜி எல்லாவற்றையும் சரி செய்வார் என்று நம்புகிறோம். ஆனால்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X