உ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (79)
Advertisement
Rape, Sex assault, Unnao, UP, Rape Capital, Report, உன்னாவ், பலாத்கார தலைநகர், உ.பி., போலீசார்,  பலாத்காரம்,

உன்னாவ் : அதிகளவு பலாத்கார சம்பவங்கள் நடந்து வருவதால், உ.பி.,யின் உன்னாவ் மாவட்டம், 'பலாத்கார தலைநகராக ' மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு, கடந்த ஜனவரி முதல் நவ., வரை 86 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.,யில் லக்னோவில் இருந்து 63 கி.மீ., தொலைவிலும், கான்பூரில் இருந்து 25 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள மாவட்டம் உன்னாவ். இங்கு 31 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 86 பலாத்கார வழக்குகளும், 185 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது குல்தீப் செங்கார் மீதான பாலியல் வழக்கும், பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் , புகார் கொடுத்ததால், தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கும் முக்கியமானது ஆகும்.

24 வயதான அந்த இளம்பெண்ணை, இரண்டு இளைஞர்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர். புகார் அளித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுதலையானார்கள். விசாரணைக்காக அந்த இளம்பெண் ஆஜராக வந்த போது, குற்றவாளிகள், பெட்ரோலை ஊற்றி எரித்தனர். இதில்படுகாயமடைந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




உன்னாவ் மாவட்டத்தில், அசோகா, அஜ்கெயின், மஹி மற்றும் பனகர்மவு நகரிலும் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியிட்டனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். பாலியல் வழக்குகளை போலீசார் சரியாக கையாளவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அஜ்கெயின் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், உன்னாவ் நகர போலீசார், அரசியல்வாதிகள் பிடியில் உள்ளனர். தங்களது அரசியல் தலைவர்களின் அனுமதியில்லாமல், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இதனால், கிரிமினல்களுக்கு தைரியம் அதிகரிக்கிறது என்றார்.

உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், அரசியல் காரணமாக குற்றம் அதிகரிக்கிறது. அரசியல் லாபங்களுக்காக கிரிமினல்களை அரசியல் வாதிகள் பயன்படுத்துகின்றனர். போலீசாரை தங்கள் காலடியில் வைத்துள்ளனர். நில பிரச்னை காரணமாக விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்ட போது, போலீசார் செய்வது அறியாமல் நின்றனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08-டிச-201900:48:34 IST Report Abuse
Mirthika Sathiamoorthi நாங்களும் ஹிந்துதானே சாமியோவ்? ..நீங்கதான் ஹிந்துவா ஒரே மதமா இருந்தாலும் ஏன் எங்கூட சேரேன்னு கேக்குறியே இது நியாயமா சாமி? ..எங்களை ஏங்க சாமி ஒதுக்கியே வைக்குறீங்க? இந்துவா இருந்தாலும் கோயிலுக்குள்ளே வராதேன்னு சொல்றியே என்ன நியாயம் சாமியோவ் ? இதே எங்க அய்யனார் கோயிலுக்கு வந்துபாரு...சாமி கர்பகிரகம்வரை யார்ருவேனாலும் வரலாம்...நான் உணமையான ஹிந்துவா இல்ல நீயா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
07-டிச-201922:58:55 IST Report Abuse
Nallavan Nallavan யோகி ஆதித்தியநாத் பத்தி டீப்பா விசாரிச்சா அவனோட வண்டவாளம் கூட வெளிவரும் ......
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
07-டிச-201921:22:57 IST Report Abuse
Anandan பிஜேபி ஆட்கள் தவறே செய்தாலும் யாரும் அது தவறு என்றே சொல்லக்கூடாது என்று விரைவில் சட்டமே வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X