பொது செய்தி

இந்தியா

நெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (80)
Advertisement

லக்னோ : உ.பி.,யின் உன்னாவ் நகரில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண் கடைசியாக போலீசாரிடமும், தனது குடும்பத்தினரிடமும் பேசிய வார்த்தைகள் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.






உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம் பெண், கோர்ட் விசாரணைக்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார். இதில் 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.





அப்பெண் கடைசியாக பேசிய வார்த்தைகள் குறித்து அவரின் சகோதரர் கூறுகையில், நேற்று என் சகோதரியை நான் அரவணைத்து பேசிய போது, " என்னை காப்பாற்றுங்கள். நான் இறக்க விரும்பவில்லை. என்ன நடந்தாலும் அவர்களை தப்பிக்க விட்டு விடக்கூடாது. அவர்களை தூக்கிலிட வேண்டும்" என கூறினார். யாரையும் தப்பி விட மாட்டோம் என நான் அவளுக்கு வாக்குறுதி அளித்தேன் என்றார்.





அப்பெண்ணின் தந்தை கூறுகையில், என் மகளுக்கும் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். ஐதராபாத்தில் வழங்கப்பட்டது போன்ற நீதி வழங்கப்பட வேண்டும். அது மட்டும் தான் இது போன்ற கொடூரமான குற்றங்களை செய்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வலுவான எச்சரிக்கையாக இருக்கும். அந்த பயம் ஏற்படாமல் போனதால் தான் பலர் தவறு செய்து விட்டு சிறைக்கு சென்றாலும், ஜாமினில் வெளியில் வந்து மீண்டும் அதே குற்றத்தை செய்கிறார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
10-டிச-201912:51:27 IST Report Abuse
R Ravikumar அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்காது.. அந்த பெண்ணின் சாபம் தான் ஏதாவது செய்யும் அந்த குற்றவாளிகளை. கண்ணை மூடி கடந்து செல்வோம் . வெட்கமாக இருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
09-டிச-201911:04:07 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அரசியல் பொருளாதார அதிகார ஏற்றத்தாழ்வுகளை மனதில் வைத்தே இங்கு உடனடி தண்டனை தரப்படுகிறது இதே வெட்கக்கேடான செயல். தண்டனை எவனோ இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sathyam - Delhi,இந்தியா
08-டிச-201916:09:02 IST Report Abuse
sathyam இந்த ஜாமீன் முறை முதலில் நிறுத்த பட வேண்டும். பணம் மட்டும் இருந்தால் போதும். மார்க்கெட்டில் மீன் போல எளிதாக ஜாமீன் கிடைக்கிறது . முதல்வர் யோகியின் ஆரம்ப என்கௌண்ட்டர் வேகம் இப்போது இல்லை. அதன் பலன் தான் இது போல சம்பவங்கள். இனி பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X