பொது செய்தி

இந்தியா

உன்னாவ் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: யோகி உறுதி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (46)
Advertisement
unnaokibeti, UP CM,உன்னாவ், இளம்பெண், தீவைத்து எரிப்பு, முதல்வர் யோகி, சமாஜ்வாதி, அகிலேஷ்,

இந்த செய்தியை கேட்க

லக்னோ : பலாத்காரம் குறித்து புகாரை அளித்த இளம்பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் உன்னாவ் நகரில், பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை, குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில், பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.





இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கை: இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவு கோர்ட்டில் விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


அகிலேஷ் தர்ணா


இதனிடையே, இளம்பெண் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ், சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.




அவர் கூறுகையில், குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறது. இந்த நாள், எங்களுக்கு கறுப்பு நாள். குற்றங்களை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது . முதல்வர், உள்துறை செயலர், டிஜிபி ராஜினாமா செய்யாத வரை மாநிலத்தில் நீதி நிலைநாட்டப்படாது. இளம்பெண் எரிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. என்றார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
09-டிச-201915:17:44 IST Report Abuse
suresh kumar அந்த முக்கியஸ்தரை இன்னமும் கட்சியிலிருந்து பதவியிலிருந்தும் கழட்டி விடவில்லை. அப்புறம் என்ன நடவடிக்கை? அது எப்படி இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
07-டிச-201922:03:27 IST Report Abuse
R. Vidya Sagar இந்த காவி டிரஸ் போட்டு ஊரை ஏமாற்றும் முதல்வர் முதலிலேயே ஸ்ட்ரிக்ட்டா இருந்திருந்தால் இந்த சூழ்நிலையே வந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
07-டிச-201920:40:18 IST Report Abuse
Nallavan Nallavan .... அந்தப்பெண்ணின் புகாரை காவல்துறை முதலில் மறுத்ததால் இருந்தே ஆட்சியின் லட்சணம் புரிந்துவிட்டது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X