பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் கவலை

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (41)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி , பெண்கள்,  தாக்குதல், கேரளா,

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்; கேரளாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், சுல்தான் பதேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது : நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளதையும், சட்டம் ஒழுங்கு இல்லாததும், பெண்களுக்கு எதிரான தாக்குதலும் அதிகரித்துள்ளதை நீங்கள் பார்க்கலாம். பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது, பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது குறித்த செய்திகள் தினசரி வெளியாகின்றன.





சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கு எதிரான கொடூரங்கள் நடக்கின்றன. அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இதனால்,தான் வன்முறை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுத்து கொள்வதால், நமது அடிப்படை கட்டமைப்புகள் உடைந்து போகின்றன. இதற்கு நாட்டை வழிநடத்துகிறவர், வன்முறையிலும் அதிகாரத்தையும் நம்புவதே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
08-டிச-201906:20:34 IST Report Abuse
Darmavan இவன் குடும்பம் வளர்த்துவிட்ட குற்றங்கள்தான் இன்று தலை விரித்து ஆடுகின்றது..கடுமையான சட்டங்களால் .இவற்றை முளையிலேயே கிள்ளியிருந்தால் இப்போது இது நடக்காது.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-டிச-201905:28:26 IST Report Abuse
 Muruga Vel வேப்ப மரம் ..பசுமாடு … கட்டுரை ஞாபகம் வருது .. வேப்ப மரத்தை பற்றி கட்டுரை எழுத தயாரா இருந்த மாணவனை பசு மாடு பற்றி எழுத சொன்னா … ஒரு பக்கம் முழுக்க வேப்ப மரத்தை பற்றி எழுதிவிட்டு கடைசி வரியில் பசு மாட்டை வேப்ப மரத்தில் கட்டி வைப்பார்கள் என்று எழுதின மாதிரி ...
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
07-டிச-201921:10:08 IST Report Abuse
ramanathan உன் தாத்தன் நேரு இல்லை நேரு அவன் எழுதிய சட்டமும் இந்திய ஜனநாயகமும் தான் காரணம். இதில் அரசியல் செய்வது தவறுடா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X