பலாத்கார குற்றவாளிகள் : கொதித்தெழும் மக்கள்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (18)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நாட்டுல் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரம் சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் நேற்று (டிச.,06) பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் அதிக அளவில் கொதித்து எழுந்து வருகின்றனர்.





ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்கார சம்பவத்தின் சோகம் மறைவதற்கு முன், உபி.,யில் உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளித்த இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அப்பெண்ணும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. பார்லி.,யில் மக்கள் பிரதிநிதிகள் ஒருபுறம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டில்லியில் உன்னாவ் சம்பவத்தை கண்டித்து பெண் ஒருவர் தனது 6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. தன் மீதும், மகள் மீது பெட்ரோலை ஊற்றி அப்பெண் தீக்குளிக்க முயன்ற போது, போலீசார் அவரை தடுத்து, இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





இதற்கிடையில் கேரளாவில் வயலாறு பகுதியில் 2017 ம் ஆண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்து, கொன்ற குற்றவாளிகளில் ஒருவரான மது என்பவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






ம.பி., மாநிலம் இந்தூரில், சிறுமியை பலாத்காரம் செய்த நபரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, அங்கிருந்த வழக்கறிஞர்கள், குற்றவாளியை சராமரியாக தாக்கி, அடித்து உதைத்தனர்.

கர்நாடகாவில் 2014 ம் ஆண்டு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 32 வயது இளைஞருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் மாநில அரசு இழப்பீடு வழங்கவும் சிவமோகா சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறையும், அபராதமும் மட்டும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
07-டிச-201920:52:13 IST Report Abuse
Nallavan Nallavan நம்முடைய ஜனநாயகம் போலி ஜனநாயகம் .....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201919:47:39 IST Report Abuse
Pasupathi Subbian சீர் செய்யவேண்டிய துறைகளில் நீதித்துறையும் ஒன்று. அன்று ஆங்கிலேய ஆட்சியில் ஏற்றப்பட்ட சட்ட ஓடைசல்களை வைத்துக்கொண்டு, இந்தியாவில் இந்த நீதி துறைக்கு அதிக அளவு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிரமங்களுக்கு தக்கபடி மாற்றப்படவேண்டும் சட்டங்கள். கிரிமினல்கள், வழக்கறிஞ்சர்கள் ஆகவும், வழக்கறிஞ்சர்கள் நீதிபதிகளாகவும் வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. பிரிட்டிஷ் கால துருவேறிய சட்டங்கள் , உடைத்தெறியப்படவேண்டியவை ஏராளம்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
07-டிச-201918:51:16 IST Report Abuse
ezhumalaiyaan தரம் தாழ்ந்து பொய் கொண்டிருக்கும் (தமிழ்) சினிமாக்கள் மற்றும் மெகா சீரியல்களும் ஒரு காரணம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
07-டிச-201922:59:08 IST Report Abuse
Nallavan Nallavanஅவர்களைக் கேட்டால் மக்கள் வாழ்க்கையில் நடப்பதைத்தானே அப்படியே எடுக்கிறோம் .என்கிறார்கள் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X