வெங்காயம் திருடிய நபருக்கு அடி உதை

Updated : டிச 08, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (7)
Advertisement
புதுச்சேரி, வெங்காயம், திருட்டு,

புதுச்சேரி : புதுச்சேரியில் வெங்காய மூட்டையை இருசக்கர வாகனத்தில் திருடியவரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.140 ஐ தாண்டியுள்ளது. இங்கு பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு காரணமாக சமீபநாட்களாக வரத்தும் குறைந்துள்ளது.




இந்நிலையில், புதுச்சேரியில் பெரிய அங்காடியான குபேர் அங்காடி ஒட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியில் வேல்முருகன் என்பவர் கடந்த 25ஆண்டுகளாக மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இன்று(டிச.,7) அதிகாலை பெங்களூரில் இருந்து லாரி மூலம் வேல்முருகன் கடைக்கு வந்த வெங்காய லோடை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில், ஒரு மூடை வெங்காயம் மாயமானது. இதனால், அதிர்ச்சியடைந்த, உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மாயமான வெங்காயத்தையும், திருடிய நபரையும் தேடினர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வெங்காய மூட்டை ஒன்றை கடத்தி செல்ல முயன்றார் அப்போது அங்கு இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவரை பிடித்து கட்டி வைத்து உதைத்து கேட்ட போது அவர் ஐயங்குட்டி பாளையம், காந்தி திருநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், முதலில் ஒரு வெங்காய மூட்டையை திருடி சென்று வீட்டில் வைத்த பின்னர் இரண்டாவது மூட்டையை திருடும் போது மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் திருடி வைத்திருந்த ஒரு மூட்டை வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். அவர் பூண்டு மூட்டைகளையும் திருடியது விசாரணையி்ல் தெரியவந்தது. வெங்காய விலை உயர்வு காரணமாக இந்த திருட்டு நடந்து இருப்பதாக கடையின் உரிமையாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201900:02:19 IST Report Abuse
Tamilan இதேபோல் நாட்டில் பல ஆயிரக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன . அங்கெல்லாம் சென்று மனித உரிமைகள் ஆணையும் இவர்கள் உடம்பை தடவிப்பார்க்க முடியுமா ?. அவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் கொண்டு சென்று நீதியை மனித உரிமையை நிலைநாட்ட முடியுமா ?. பத்திரிகைகளில் வரும் ஒரு சில சம்பவங்களை மட்டும் இவர்கள் விளம்பரத்திற்காக போய் பிரச்சினையாக்குவது என் ? ஒழுங்காய் வேலை செய்யும் அரசியல் சட்ட அதிகாரிகளை அடக்க நினைப்பது ஏன் ?. இவர்களுக்கு நேரம் சரியில்லாவிட்டால், தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற கதையாக உள்ளார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-டிச-201923:28:08 IST Report Abuse
Vena Suna வெங்காயத் திருடன் அடி உதையினால் வெங் காயம் அடைந்தான்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-டிச-201916:54:41 IST Report Abuse
வெகுளி ஏற்கனவே பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம்ன்னு ரெண்டு திருடனுக..... இப்ப இவன் மூணாவது வெங்காய திருடன்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X