உன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (67)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ : உன்னாவ் பலாத்கார சம்பவத்தின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய போது காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கண்ணீர் விட்டு அழுதார்.

உ.பி.,யின் உன்னாவ் பகுதியில் பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் உதவி கேட்டு உடலில் எரியும் நெருப்புடன் ஒரு கி.மீ., தூரம் வரை ஓடிச் சென்றுள்ளார். 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.40 மணிக்கு உயிரிழந்தார்.


அப்பெண்ணின் குடும்பத்தினரை காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுனார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உ.பி., முதல்வர் கூறுகிறார், குற்றவாளிகளுக்கு உ.பி., மண்ணில் இனி இடமில்லை என்று. ஆனால் நடப்பவற்றை பார்க்கும் போது, பெண்களுக்கு இனி இங்கு இடமில்லை என்பதை போல் அவர் மாநிலத்தை மாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஓராண்டாக தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு பா.ஜ.,வில் உள்ள சிலருடன் தொடர்பு இருப்பதாக கேள்விப்பட்டேன். இதனால் தான் அவர்கள் தொடர்ந்த பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு பயம் என்பதே இல்லாமல் போய் விட்டது என கண் கலங்கி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
08-டிச-201905:22:00 IST Report Abuse
 Muruga Vel டில்லியில் தந்தூரி அடுப்பில் மனைவியை கொன்று எரித்த காங்கிரஸ் தலைவர் இன்னமும் திஹாரில் இருக்கிறார் …
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201900:03:53 IST Report Abuse
naserali51034@gmail.com காவி பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் ‘உன்னாவ்’ தொகுதி எம்.எல்.ஏ. விடம் வேலை கேட்டு போன 16 வயசு சிறுமி பாஜக எம்.எல்.ஏ. வால் பலாத்காரம் செய்யப்படுகிறாள்,பாஜக முதல்வர் யோகி யிடம் முறையிட்டு விசாரணை கேட்ட தந்தை மர்மமாக இறக்கிறார், தனது கணவர் மற்றும் மகளுக்காக நீதி கேட்க போன தாய் லாரி ஏற்றி கொல்லப்படுகிறார்.நேற்று கற்பழித்தவனுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றக்கு சென்ற அந்த அனாதை சிறுமியும் நீதிமன்ற வாசலில் எரிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.இன்று அவளும் இறந்துவிட்டாள்.இறப்பதற்கு முன்பு அவள் கடைசியாக சொன்ன வார்த்தை "என்னை காப்பாற்றுங்கள் அவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்"என்ன செய்யப்போகிறது சட்டமும் நீதியும்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
08-டிச-201922:03:01 IST Report Abuse
Anandanதேசபக்தி சாயம் பூசப்பட்ட கட்சியை சேர்ந்தவரை எப்படி குற்றம் சொல்லலாம்? அது தவறு என்று கொதிக்கிறார்கள் அந்த கட்சியின் ஆட்கள். அதை பலவிதமாய் சொல்லிவந்தனர் இப்போது சொல்வது இதை அரசியலாக்காதீர்கள் ஏன்? சாயம் வெளுத்துடுமேனு பயம். அது வெளுத்து ரொம்ப நாளாச்சு....
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
07-டிச-201923:47:54 IST Report Abuse
Asagh busagh 24.7 கோடி மக்கள்தொகை, மட்டமான ஆண்கள், சுகாதார சீர்கேடு, மட்டித்தனமான அரசியல். உ.பி வாழ தகுதியில்லா மாநிலம். அங்கே பெண்ணாய் பிறப்பது சாபக்கேடு வாங்கியதற்கு நிகர். இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் பிறக்கும் எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X