அமெரிக்காவின் இன்னொரு முகம்: அடிதடியில் முடியும் ‛பிளாக் பிரைடே'

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (26)
Advertisement
blackfriday, பிளாக் பிரைடே,  அமெரிக்கா, பிளாக் பிரைடே விற்பனை

இந்த செய்தியை கேட்க

நியூயார்க்: அமெரிக்காவில் 2011க்குப் பிறகு, இந்த ஆண்டு நடந்த ‛பிளாக் பிரைடே' விற்பனையில் பல அடிதடி சம்பவங்கள் அரங்கேறி, அந்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளன.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடக்கும் நன்றி தெரிவிக்கும் (தேங்க்ஸ் கிவ்விங்) விழாவுக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையை , அந்நாட்டு வணிக நிறுவனங்கள் ' பிளாக் பிரைடே' என அழைக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, மக்கள் ஏராளமான பொருட்களை வாங்குவர் என்பதால், இந்நாளில் பெரிய கடைகள், நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கும். இதற்காக, அந்த கடைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். அப்போது, அடிதடி, தள்ளுமுள்ளு நடப்பது வாடிக்கை. அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். அவர்களை போலீசார் வந்து அப்புறப்படுத்தும் சம்பவங்கள் எல்லாம் நடப்பது உண்டு.
இந்த ஆண்டு 'பிளாக் பிரைடே' கடந்த நவ.,29 அன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், பெரிய கடைகள் ஏராளமான சலுகைகளை அறிவித்தன. கடைகள் முன்பு, அதிகாலை முதலே திரண்ட ஆயிரகணக்கான மக்கள், கடை திறந்ததும், ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயற்சித்தனர். ஒருவர் மீது விழுந்தடித்துக்கொண்டு, பொருட்களை போட்டி போட்டு எடுத்து, அதனை காப்பாற்ற அதன் மீதே படுத்து கொண்டனர். பல கடைகளில் இந்த ஆண்டும் அடிதடி ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கைகளாலும், தலையாலும் தாக்கி கொண்ட சம்பவங்கள் நடந்தன. அவர்களை பாதுகாவலர்கள் வந்து விலக்கி விட்டனர். சிறுவர்கள் எடுத்த பொருட்களையும் சிலர் பிடுங்கிச் சென்றனர்.
உலகின் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில் கூட இன்று வேலை குறைப்புகள் குறைந்துவிட்டன. பலர் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர். இதனாலேயே இப்படி அடிதடி நடப்பது கேவலமாக உள்ளது. ஆண்டுதோறும் அனைத்து 'பிளாக் பிரைடே'விலும் இப்படி அடிதடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது தான் அமெரிக்காவின் இன்னொரு முகமாக இருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
08-டிச-201911:29:49 IST Report Abuse
Viswam பரக்காவட்டி பயலுங்க எல்லா நாட்டுலேயும் இருக்காங்க. மத்தபடி விலைவாசி உயர்வு கம்மி, வேலைவாய்ப்பு உண்டு இல்லை, ஏழை பணக்காரன் இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல இங்கே கூட பிக் பில்லியன் டே எப்ப வரும்ன்னு காத்து கிடக்கிறானுங்க
Rate this:
Share this comment
Cancel
sathyam - Delhi,இந்தியா
08-டிச-201911:15:51 IST Report Abuse
sathyam அமெரிக்காவில் ஏழைகள், பிச்சைக்கார்கள் இல்லை என்பது போல ஒரு ஆண்ட புளுகு கிடையாது. ஆவிகளின் நிலைமை படு மோசம். அதற்கு, இந்தியா எவலோவோ தேவலாம். இதில் ஜப்பானியர்கள் மேல். எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை பேணுவர்,
Rate this:
Share this comment
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
08-டிச-201907:16:30 IST Report Abuse
Mohan Kumar Let them behave as they like, but why these third people comment Indians as indecent and look down?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X