பொது செய்தி

இந்தியா

நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (105)
Advertisement

புதுடில்லி : நீதி வழங்குவதில் அவசரம் காட்ட முடியாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தெரிவித்துள்ளார்.






ஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரை, தங்களை தாக்க முயன்றதால் போலீசார் நேற்று காலை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்டர் பலரிடமும் வரவேற்பையும், சிலரிடம் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த என்கவுன்டர் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.





அப்போது அவர், நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது. நீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அப்படி அது பழிதீர்ப்பதாக அமைந்து விட்டால், நீதி தனது உண்மையான தன்மையை இழந்து விடும் என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ஐகோர்ட்டில் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். இவ்விழாவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தும் கலந்து கொண்டிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
08-டிச-201914:25:11 IST Report Abuse
venkatan ஜன நாயகத்தின் சூழலுக்கு ஏற்ப மக்களின்நலனுலக்குத்தான் சட்டங்கள்.ஏற்கனவே இயற்றப்பட்ட காலாவதியான சட்டங்களுக்காக மக்கள் நலன் இருக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Sankar - Chennai,இந்தியா
08-டிச-201912:47:28 IST Report Abuse
Sankar இவருடைய மனைவிக்கோ அல்லது மகளுக்கோ இந்த மாதிரி நடந்து இருந்தால் இந்த மனிதன் இப்படித்தான் பேசுவாரா ?
Rate this:
Share this comment
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
08-டிச-201910:48:19 IST Report Abuse
Kumar பணக்காரனுங்களுக்கும், நடிகர்களுக்கும் ஒரே நாளில் வழக்கை நடத்தி அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுக்கும் பொது , பொது மக்களாகியாக நாங்கள் நீதி மன்றத்தை மாமா மன்றம் என்று தான் நினைக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காலம் தாழுந்திய தீர்ப்பால் தான் பொது மக்கள் பலர் இப்போது சட்டத்தை தங்கள் கையில் எடுக்கிறார்கள். தலைமை நீதிபதி அவர்களை ஜனநாயக நாடான அமெரிக்காவில் தீர்ப்பை எவ்வளவு விரைவாகவும், நேர்மையாகவும் நடத்துகிறார்கள் என்று பார்த்து படியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X