பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: டிச.,27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் திமுக தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடித்து, அடுத்த 4 மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏற்கனவே வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பாணையை வாபஸ் பெறுவதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டார். தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புக்கள் தவிர்த்து, ஊரக அமைப்புக்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தல் நடத்தை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்திற்கு தடை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அட்டவணையை மட்டும் வெளியிட்டார்.






தேர்தல் அட்டவணை விபரம் :


வேட்புமனு தாக்கல் : டிச.,9
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் : டிச.,16
மனுக்கள் பரிசீலனை : டிச.,17
மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : டிச.,19
முதல் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,27
2 ம் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,30
ஓட்டு எண்ணிக்கை : ஜன., 2
தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள் : ஜன.,4
கவுன்சிலர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு : ஜன.,6
தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் : ஜன.,11
தொடர்ந்து தேர்தல் கமிஷனர் பழனிசாமி கூறுகையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் எனவும், 2 ம் கட்ட தேர்தல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் எனவும் தெரிவித்தார்.
தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர்.






வாக்குசீட்டு முறையில் தேர்தல் :


கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் செலவு வரம்பு ரூ.34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர் இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. நியாயமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோலைபட்டி பார்த்திபன் யாராவதுஎங்களுக்கு பிரசாரம் செய்யவும்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லவும் நாட்கள் போதாது என கோர்ட் செல்ல வசதியாக உள்ளதால்உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
07-டிச-201922:39:01 IST Report Abuse
PANDA PANDI சனநாயகம் சனாதனம் சந்தானம்.. OF THE DAY COMEDY.. இவனுங்க உருப்படியாக சிந்திக்கமாட்டார்கள். நாசம் செய்துவிட்டு அதற்கு ஒரு விளக்கம் சொல்லுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
07-டிச-201921:11:47 IST Report Abuse
Sampath Kumar தேதி அறிவிப்பு செல்லாது என்ன நீதி மன்றம் சொன்னதா நியாபகம் நீங்கள் அதே தேதி அறிவித்து விட்டர்கள் எது என்ன முரண்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X