பொது செய்தி

தமிழ்நாடு

நான் 'ரெடி': நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட துடிக்கும் தமிழக ஏட்டு

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (46)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தான் தயாராக உள்ளதாக டில்லி திகார் சிறை அதிகாரிகளுக்கு, ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன், 42, விண்ணப்ப கடிதம் அனுப்பி உள்ளார்.






நிர்பயா என்ற மருத்துவ மாணவி 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியன உறுதி செய்தன.

இந்த நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி திகார் சிறையில் ஆள் இல்லாத காரணத்தாலேயே, தண்டனை உறுதி செய்யப்பட்டும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து அந்த பணிக்கு தான் தயாராக இருப்பதாக ராமநாதபுரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதமும் அனுப்பி உள்ளார்.





ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சுபாஷ் சீனிவாசன், திகார் சிறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால், தண்டனை தள்ளிப்போவதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அந்தப் பணியை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இவர் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, உறவினர்கள் யாரும் இல்லாமல் கேட்பாரற்று இருக்கும் சடலங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் தமிழக அரசின் அண்ணா பதக்கம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
12-டிச-201918:43:49 IST Report Abuse
mrsethuraman  என்னது ? தூக்கில் போட ஆள் இல்லையா ? நல்லாத்தான் கயிறு திரிக்கிறாங்க .
Rate this:
Share this comment
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
08-டிச-201919:44:35 IST Report Abuse
rajprince துக்கு வேண்டாம் நண்பரே, ஊர் மத்தியில் மக்களால் அடித்து சாகவேண்டும் ,இனி எவனுக்கும் இதுபோல் எண்ணம் வரக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Mahadevan Sankaranarayanan - Bangalore,இந்தியா
08-டிச-201918:39:18 IST Report Abuse
Mahadevan Sankaranarayanan இதெல்லாம் சுத்த கட்டு கதை .கொடுமையிலும் கொடுமை. கயிற்றை கழுத்தில் மாட்டி அதனுடன் தொடர்புடைய லிவரை பின் புறம் தள்ளவேண்டும். இதற்கு திஹாரில் உள்ளவர்களுக்கே பயிற்சி அளிக்கலாம். மேலும் தூக்கில்தான் போடா வேண்டுமா. இந்த நாய்களை நெற்றிப்பொட்டிலோ அல்லது அந்த உறுப்பை கூட சுட்டு தண்டனையை நிறைவேற்றலாம். நாய்களுக்கு பிரியாணி போட்டு வளர்க்காதீர்கள். எங்களின் வரிப்பணத்தை வீணடிக்காதீர்கள். தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றுங்கள் .
Rate this:
Share this comment
வால்டர் - Chennai,இந்தியா
13-டிச-201917:31:30 IST Report Abuse
வால்டர்Mahadevan Sankaranarayanan - Bangalore,இந்தியா: இருங்கப்பு. அதற்க்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் சொல்வதை போல் செய்தால் போர்க்களம்தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X