அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாட்டில் சுதந்திரம் இல்லை: ப.சிதம்பரம்

Added : டிச 07, 2019 | கருத்துகள் (24)
Advertisement
நாடு, சுதந்திரம், இல்லை, ப.சிதம்பரம்

சென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னை வந்தார். அவர் நிருபர்களிடம் பேசுகையில்;
நாட்டில் தற்போது சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நாட்டில் சுதந்திர குரல் நெறிக்கப்படுகிறது. சுதந்திர எழுத்து முடக்கப்படுகிறது. சுதந்திரத்தை பிரிக்க முடியாது. உங்கள் சுதந்திரம்தான், என்னுடைய சுதந்திரம். உங்களின் சுதந்திரத்தை நான் பாதுகாக்காவிட்டால் , எனது சுதந்திரத்தை நீங்கள் பாதுகாக்க முடியாது. ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால் அனைவரது சுதந்திரமும் பறிக்கப்பட்டதற்கு சமம். காஷ்மீரில் இன்று 75 லட்சம் மக்களின் பேர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பா.ஜ., அரசு ஒரு பாஸிச போக்கை நோக்கி நடந்து வருகிறது. தென்நாட்டு மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் காட்டும் எச்சரிக்கையை நாடு முழுவதும் என்று காட்டுகிறார்களோ அன்று தான் சுதந்திரம் வரும். பா.ஜ.,வுக்கு எதிரான எண்ணம் தமிழகம் என் மன உறுதியை குலைக்க நினைத்தார்கள் நான் குலையவில்லை , நான் வீழ்வேன் என்று நினைத்தால் நான் வீழ மாட்டேன். தொடர்ந்து போராடுவேன். நாட்டு மக்களை சந்தித்து பேசுவதற்கு சோனியாவிடம் கூறினேன். தொடர்ந்து பேசுங்கள் என்றார்.
இந்திய பொருளாதாரம் மோசமாக நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான் தொடர்ந்து எழுதுவேன், பேசுவேன். நிர்பயா நிதியின் கீழ் ரூ.3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட நிர்பயா நிதி பயன்படுத்தவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். நாடு முழுவதும் பெண்களின் நிலை கொலைகளமாக மாறி வருகிறது. அரசு மட்டுமல்ல, ஆண்மகன்களும் பாதுகாப்பை வழங்க வேண்டும். பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தூக்கி நிறுத்த முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-டிச-201904:55:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni சேர்த்தவர்கள் பல மில்லியன் அவைகளை அனுபவிக்க உரிமையே இல்லேன்னா அதுக்குப்பேருதான் அன்பவிக்கவேமுடியாத சுதந்திரமா அய்யா .எங்களுக்கெல்லாம் ஒண்ணாந்தேதிபேன்க்ஷன் மட்டுமேதான் இருக்கு அதையும் நிம்மதியா செலவு செய்து வாழறோம் சுதந்திரமாவே இருக்கோமுங்க நீறு உம்மை தலைவி சோனியா போன்ற வாலுக்கேதான் இஷ்டம்போல வாழ சுதந்த்திரம் இல்லே என்று ஒப்பாரியா வைக்குறீங்க
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
08-டிச-201911:26:57 IST Report Abuse
sankar சுதந்திரம்? கணக்கு வழக்கில்லாமல் கொள்ளை அடிக்கவா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-டிச-201902:22:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X