பொது செய்தி

இந்தியா

ஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிரமம்: ஜனாதிபதி கவலை

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (26)
Advertisement

ஜோத்பூர்: நீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த கோர்ட் திறப்பு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:






இன்று ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் புகார் மனுவுடன் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மிக முக்கியமானதாகும். ஏனெனில் நாம் அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் நீதி வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது பெரும் செலவினமானதாக ஏழைகளுக்கு உள்ளது. இது மாற்றப்பட வேண்டும்.
அதிக செலவினத்தால் ஏழைகள் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவதில்லை. ஏழைகள் முகத்தை நாம் நினைத்தால் அவர்களுக்கு சரியான தீர்வை காண முடியும். இதற்கான ஒரு வழியாக தற்போது ஏழைகளுக்கு இலவச சட்ட மையம் உள்ளது. ஏழைகளுக்கும் நீதி கிடைக்க இன்னும் நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.




Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
08-டிச-201916:50:45 IST Report Abuse
Balaji வழக்குகளுக்கு அவற்றின் தன்மைக்கு ஏற்ப காலவரையறை நிர்ணயிக்க சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..... தேவையில்லாத விடுமுறைகளை கைவிட நீதிமன்றம் முயற்சிகளை தாமாகவே மேற்கொள்ள வேண்டும்....... மிக மிக முக்கியமாக வழக்குகளை வாதாட வழக்கறிஞருக்கு எவ்வளவு கட்டணமாக கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் வரையறை செய்ய வேண்டும்....... வேண்டுமானால் வழக்கறிஞர்களுக்கு அவர்களின் வாதத்திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு grade முறையை அறிமுகப்படுத்தி அதற்கேற்ப கட்டங்களையும் நிர்ணயித்து கொடுக்கலாம்........
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
08-டிச-201913:04:54 IST Report Abuse
pattikkaattaan ஐயா இந்த நாட்டுல ஏழைக்கு ஒரு நீதி , பணக்காரனுக்கு ஒரு நீதி .. அதை மாற்ற முடியுமா ?..
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
08-டிச-201906:26:21 IST Report Abuse
s t rajan ஆமை வேகத்தில் நீதிமன்றங்கள் நகருகின்றன. கொள்ளைக்கார அரசியல் வ்யாதிகளுக்கு golden jubilee bails எளிதாகக் கிடைக்கின்றன, வெளிநாட்டிற்கு ஓட அனுமதி கிடைக்கின்றன. ஆனால் ஆதரவற்ற பெண்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்குள் அந்தப் பெண்டிர் மறைந்து விடுகிறார்கள். இராமருக்கே நூற்றாண்டு கழித்துதான் விமோசனம் கிடைத்திருக்கிறது. வெட்கக் கேடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X