சுட்டுத் தள்ளுங்க:உன்னாவ் பெண்ணின் தந்தை ஆவேசம்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (20)
Advertisement

லக்னோ : உ.பியில் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகையை உ.பி அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளுமாறு அப்பெண்ணின் தந்தை கோரி உள்ளார்.






உத்திரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், விசாரணைக்காக கோர்ட்டிற்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார். 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.





இது தொடர்பாக, நீதி கேட்டு அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பல போராட்டங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது. டில்லியில் மருத்துவமனைக்கு வெளியில் பெண்ணுக்கு நீதி கேட்டு பல பெண்கள் போராடினர். இந்நிலையில் ஒருவர் 6 வயது சிறுமியின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்து கண்ணீர் வடித்த தந்தை, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். "பெண்களை பலாத்காரம் செய்பவர்களை சுட்டுத் தள்ளுங்கள்" என்று ஆவேசமடைந்தார். ஐதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததற்கு நாடு முழுவதிலிருந்தும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீதி நிலைநிறுத்தப்பட்டதாக கூறுகின்றனர். அதுபோல் உன்னவோ வழக்கிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்றார். குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என அந்த பெண்ணின் சகோதரரும் கூறினார்.


ரூ.25 லட்சம் நிதி


இந்நிலையில் உன்னாவ் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதால் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். உன்னாவோ பெண் குறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறினார். அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி அரசு சார்பில் வழங்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து, மாநில அமைச்சர் கமல் ராணி வருண், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க உன்னாவோ வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது பேசிய அமைச்சர் கமல் ராணி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான இழப்பீட்டு காசோலை உன்னாவ் கலெக்டர் மூலம் வழங்கப்படும். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒரு வீடு ஒதுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-டிச-201901:57:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது இன்னொரு உன்னாவ் கற்பழிப்பு வழக்கு. நான் முதலில் அனைவருக்கும் தெரிந்த பாஜக எம்.எல்.ஏ செய்த அக்கிரமமான இருக்குமோ என்று நினைத்தேன். இது இன்னொன்றா? பாதிக்கப்பட்டவரின் பெயரை போடாமல் .. இன்னமும் சந்தேகமாகவே உள்ளது - விக்கிப்பீடியாவில் அப்டேட் உள்ளது.. எப்படியோ ராமராஜ்ஜியம் உண்மையிலேயே பாலியல் தலைநகரம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
07-டிச-201922:56:36 IST Report Abuse
Rajas ஜாமீன் கிடைத்தவுடன் அந்த குற்றவாளியை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து லாடம் கட்டி அனுப்பியிருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
07-டிச-201922:35:21 IST Report Abuse
PANDA PANDI அய்யா இது ராமராஜன் ஆட்சி சுட்டுத்தள்ளமுடியாது. வேண்டுமென்றால் அம்பு விட்டு பார்க்கலாம்... இதுதான் SOUTH INDIA NORTH INDIA வித்யாசம். இப்போ புரிகிறதா சொம்புகளே..
Rate this:
Share this comment
சீனு, கூடுவாஞ்சேரிதெலுங்கான தமிழகத்திற்கு நார்த். தமிழகம் சவுத். நார்தில் பெண் கால்நடை மருத்துவரைப் பதம் பார்த்த கயவர்கள் என்கௌன்ட்டரில் சுட்டுக் கொல்ப்பட்டனர். ஆனால் பொள்ளாச்சியில் பல பெண்களின் கற்பை சூரையாடிய கொடூரர்கள் பெயில் உலா. அதாவது உங்கள் பாணியில் சவுத். எப்படியிருக்கிறது உங்கள் ஒப்பீடு. பாஜகவை குறை கூற வேண்டும். அதுதான் உங்கள் எண்ணம். அது ப.சியின் மினரல் வாட்டர், ஐஸ்கிரீம் பொருளாதாரம் மாதிரி உள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X