அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் ஜெ., பார்முலா! அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (4+ 2)
Advertisement
உள்ளாட்சி தேர்தலில்  ஜெ., பார்முலா! அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம்

சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், அ.தி.மு.க., நேரடியாக போட்டியிட்டு, வெற்றியை சுலபமாக கைப்பற்றும், ஜெ., பார்முலாவை, உள்ளாட்சி தேர்தலிலும் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கூட்டணி கட்சி


அதாவது, தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும், அனைத்து இடங்களையும் கைப்பற்றும் வியூகத்தை, ஆளுங்கட்சி மேலிடம் வகுத்து உள்ளது.இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தல்களில், தி.மு.க.,வுடன் நேரடியாக மோதுவதை விட, அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து தான், அ.தி.மு.க., களமிறங்கும். அதில் தான் எளிதாக தொகுதிகளை கைப்பற்ற முடியும். தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளை, தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு தான், அ.தி.மு.க., ஒதுக்கும்.

ஜெயலலிதா கடைப்பிடித்த, இந்த பார்முலாவை தான், உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்ற, அ.தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது. அதாவது, தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி, 25 சதவீதம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலா, 5 சதவீதம்; கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட இதர கட்சிகள் சேர்த்து, 5 சதவீதம் என, மொத்தம், 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.


வெற்றி


கூட்டணி கட்சிகளுக்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்களில் தான், தி.மு.க., போட்டியிட வாய்ப்பு உள்ளது. எனவே, தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிற, 50 சதவீத இடங்களை குறிவைத்து, அ.தி.மு.க., போட்டியிட விரும்புகிறது. அதோடு, தி.மு.க., போட்டியிடும், 50 சதவீத இடங்களில், 25 சதவீத இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றினாலே, அது, மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விடும்.

எனவே, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் பார்முலாவை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (4+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-டிச-201919:36:30 IST Report Abuse
Malick Raja கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக ஆடாத ஆட்டமா .. பாடாத பாட்டா .. அடேங்கப்பா .. ஊதுகுழல் ஊடகங்கள் .கூலிப்படைகள் என அனைவரும் திமுக ஒரு முடிந்து போன ஒன்று .. மக்கள் 40.தொகுதிகளும் வாக்குகளை வாரி கொட்டுவார்கள் என்றும் கருத்துக்கணிப்புகள் கூலிக்கு மாரடித்த கதையாக என்னென்னமோ சொன்னார்கள் ..ஆனால் விளைந்தது என்ன திமுக 38.இடங்களை அள்ளியது .. அதிமுகவுக்கு ஒரு இடம் மட்டுமே அதுவும் . மாற்றுவழிகள் மூலம் .. 37.இடங்களில் மக்கள் மண்ணைவாரி கொட்டியது உலகமே கண்ட ஒன்று .. எனவே இரண்டு சட்டமன்ற இடைத்தேர்களில் வென்றதை மிகைத்து கொண்டு அதைவைத்து வெற்றியை பிடிப்போம் என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவே முடியும் .. அதிமுக இனி ஒருக்காலும் தேர்தல்களில் வெல்லவே முடியாது . ஈபிஎஸ் ஓபிஎஸ் &கோ வுக்கு தமிழகத்தில் வேலை இல்லை அடுத்த ஆட்சியில் சொத்துகுவிப்பு வழக்குகளில் உள்ளே செல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
08-டிச-201903:49:37 IST Report Abuse
Palanisamy Sekar என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது திமுக அறவே அழிக்கப்படணும் என்பதுதான் சாமான்ய மக்களின் எண்ணமெல்லாம். உண்டியல் குலுக்கி மக்களை ஏமாற்றிய கம்யூனிஸ்ட்களை போன்றே கொங்கு கட்சியையும் காங்கிரசையும் சேர்த்து மக்கள் தோற்கடிக்கவேண்டும். பணப்பட்டுவாடாவை இந்நேரம் திமுக துவங்கி இருக்கும். ஆளும் தரப்பு மேலும் உஷாராக இருக்கவேண்டும். உள்ளூர் செல்வாக்கு உள்ள பிரதிநிதிகளை திமுகவினர் இந்நேரம் பேரம் பேசி வளைத்திருப்பார்கள் நெல்லையில் கனிமொழி தேர்தலுக்கு முன்னரே அதனை செய்தது போல..பணத்தால் திமுக வெற்றிபெறலாம் என்கிற பார்முலாவை இந்த தேர்தலில் இல்லாமல் ஆக்கிடணும். தலைக்கனத்தில் உடனிருக்கும் கூட்டணி கட்சியினரை உதாசீனம் செய்தால் ஆளும்தரப்பு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். நடிகர்களின் கட்சியை கூட திமுக விடாமல் கூட்டணியில் சேர்க்க முடிவு செய்திருக்கும். அதன் தாக்கம்தான் கமலை மருத்துவமனையில் ஸ்டாலின் சந்தித்த ரகசியம். உஷாராக இருங்கள் ஆளும் கட்சியினரே..உஷார்..தீயசக்தியின் வளர்ச்சி மிக மிக ஆபத்தானது. உணர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-டிச-201902:21:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதுன்னு தருமயுத்த நாயகர் சொன்னது மக்கள் மறந்திருப்பாங்களா?
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
08-டிச-201910:22:23 IST Report Abuse
மூல பத்திரம் எல்லாத்தயும் மறப்போம், ஒரே குறிக்கோள் போலி மத சார்பின்மை ஒழியவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X