பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகர்கள் நம்பிக்கை வீண் போகாது: ரஜினி

Updated : டிச 08, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (32)
Advertisement

சென்னை: ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது. என்று தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினார்.






ரஜினிகாந்த் நடித்த ''தர்பார்'' படத்தின் இசை வெளியீட்டு விழா விழா நடந்தது. அதில் ரஜினி பேசியதாவது:  வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என்று கபாலி, காலா படங்களில் நடிக்க தொடங்கினேன். தர்பார் படம் ஸ்டைலாக இருக்கும். சந்திரமுகி படத்தை காட்டிலும் இதில் நயன்தாரா கிளாமராக இருக்கிறார்.

வரும் 12ம் தேதி 70 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ரஜினி என்று எனக்கு பெயர் வைத்தவர் பாலசந்தர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. என்னை கதாநாயகன் ஆக்கியவர் கலைஞானம். அவரது நம்பிக்கையும் வீண்போகவில்லை. அதேபோல், ரசிகர்களான நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் நிச்சயமாக வீண்போகாது. இவ்வாறு ரஜினி பேசினார்.





ரஜினி நடித்த ''தர்பார்'' படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று(டிச.,7) நடந்தது. இதில் இயக்குனர் முருகதாஸ், நடிகர் ரஜினி, இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது: ரமணா படம் பார்த்தபோதே முருகதாசை எனக்கு பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தள்ளிப்போய்விட்டது. வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்க துவங்கினேன். நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தர்பார் படம் ஸ்டைலாக, த்ரில்லாகவும் இருக்கும். சந்திரமுகி படத்தை காட்டிலும் நயன்தாரா கிளாமராகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்.

இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. அந்த திறமை அனிருந்திற்கு இப்போதே இருக்கிறது. வரும் 12ம் தேதி முக்கியமான நாள். 60 வயதில் இருந்து 70 வயதில் அடியெடுத்து வைக்கிறேன். வழக்கம் போல் அன்றைய தினம் நான் ஊரில் இருக்க மாட்டேன். என் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். நல்லநடிகன் ஒருவன் வந்தால் ரஜினி என பெயர் வைக்க வேண்டுமென பாலச்சந்தர் யோசித்து வைத்திருந்த ஒரு பெயரை தான் எனக்கு அவர் வைத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதேபோல், நீங்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது. தமிழக அரசு மீது பல விமர்சனங்களை வைத்தாலும், இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
08-டிச-201917:45:37 IST Report Abuse
K E MUKUNDARAJAN இவருக்கு அரசியல் பேச ஏதாவது இசை வெளியீட்டு விழா அல்லது பாலச்சந்தர் நினைவு தினம் வேண்டும். தன் காசை செலவழித்து ஒரு கூட்டம் போட்டு எதையும் செய்ய மாட்டார். இப்போது தர்பார் ஓடவேண்டும் கிழவருக்கு . அரசியலாவது இன்னொண்ணாவது. இவருடைய ரசிகனெல்லாம் பீமரத சாந்தி(70 வயது விழா) செய்துகொண்ட பின்னரும் அரசியலுக்கு வரமாட்டார். தன் படம் ஓட ரிலீஸின் போது பிலிம் காட்டிவிட்டு ஓடிவிடுவார். இப்போதும் அப்படித்தான்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
08-டிச-201913:59:36 IST Report Abuse
dandy இந்த ஆள் பத்து ஆதி நடந்தால் மூச்சு வாங்குவான்..இறக்குமதி வேறு ..ரசிகர் குஞ்சுகள் வீட்டில் ஒரு வேலை உணவு கேள்விக்கிடம் ...இந்த அழகில் முதல் அமைச்சராம் ...சினிமாவில் set போட்டு பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
08-டிச-201913:57:00 IST Report Abuse
dandy make up போட்டு ..வெளிச்சத்தில் நின்று யாரோ எழுதி கொடுக்கும் வசனத்தை ...சொல்பவன் எல்லாம் அரசியல் வாதி ஆகி விட முடியாது ...ஆதி மடத்தில் இருந்து ஆண்டு கணக்கில் உழைக்க வேண்டும் ....உலகில் அதிகம் காய் நட்டுகள் வாழும் டாஸ்மாக் நாட்டில் ..சில்லறைக்கு எவனும் கூட்டம் சேர்க்கலாம் ஹி ஹி ஹி டமில் பேசும் டாஸ்மாக் நாடடை ஆள இறக்குமதி செய்யப்படட டமில் பேசும் வழுக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X