'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்!

Updated : டிச 10, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (7)
Advertisement
'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்!

நஷ்டத்தில் இயங்கி வரும், அரசு பொதுத்துறை நிறுவனமான 'ஏர் - இந்தியா'வின் பங்குகளை வாங்க, உள்நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததை அடுத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்து, முதலீடுகளை கவர்ந்திழுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், 100 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும், அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

டாடா குழுமத்தினரால், 1932ல், 'டாடா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில், விமான போக்குவரத்து சேவை துவங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இந்த நிறுவனத்தின், 49 சதவீத பங்குகளை, மத்திய அரசு வாங்கியது. இதையடுத்து, டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், ஏர் - இந்தியா என, மாற்றப்பட்டது. பின், 1953ல், ஏர் - இந்தியாவின் பெரும்பாலான பங்குகளை, மத்திய அரசு கையகப்படுத்தியது.


நஷ்டம்


'இந்தியன் ஏர்லைன்ஸ்' என்ற மற்றொரு விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தையும், மத்திய அரசு துவக்கியது. இவ்விரு நிறுவனங்களும், பல்வேறு காரணங்களால் நஷ்டத்தில் இயங்கின. இதையடுத்து, ஏர் - இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், இந்தியன் ஏர்லைன்ஸ், 2007ல், ஏர் - இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால், ஏர் - இந்தியாவின் கடன் சுமை, அதிகரிக்க துவங்கியது. இந்நிறுவனத்திற்கு, தற்போது, 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

இதையடுத்து, பொதுத்துறை நிறுவனமான ஏர் - இந்தியாவுக்கு சொந்தமான, 76 சதவீத பங்குகளை, விற்பனை செய்துவிட்டு, 24 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொள்ள, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு முடிவு செய்தது.


ஆர்வம்


இதற்கான முயற்சிகளிலும், மத்திய விமான போக்குவரத்து துறை இறங்கியது. ஆனால், பங்குகளை வாங்குவதற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான போக்குவரத்து நிறுவனங்கள், ஆர்வம் காட்டவில்லை. இதற்கு, வேறொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, வெளிநாடுகளை சேர்ந்த விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள், இந்திய விமான போக்குவரத்து துறையின் பங்குகளை, தன் இஷ்டம் போல வாங்கி குவித்துவிட முடியாது. வெளிநாட்டு நிறுவனங்கள், இங்கு, 49 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும். மீதமுள்ள பங்குகளை, அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்படி, சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

மேலும், விமான போக்குவரத்து துறை அல்லாமல், பிற துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், 49 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை வாங்க வேண்டுமானால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதன் காரணமாக கூட, ஏர் - இந்தியா நிறுவன பங்குகளை வாங்குவதற்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை என, கூறப்படுகிறது.இதனால், இந்த சட்ட திட்டத்தை சற்று தளர்த்தினால், ஏர் - இந்தியா பங்கு விற்பனையில், முன்னேற்றம் ஏற்படும் என, மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதன் துவக்கமாக தான், 'விமான போக்குவரத்து துறையில், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க, மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது' என, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஜூலையில், மத்திய பட்ஜெட் உரையின் போது குறிப்பிட்டார். இந்நிலையில், செப்டம்பர், 19ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு வழிமுறைகளையும் முயற்சித்து, ஏர் - இந்தியா பங்குகளை விற்பனை செய்வது குறித்து, முடிவெடுக்கப்பட்டது.


எதிர்பார்ப்பு


இந்த கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்றனர். அதில் ஏர் - இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய, முடிவெடுக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளுக்கான சட்டதிட்டங்களை தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் முதலீடுகளை கவர்ந்திழுக்கவும், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதையடுத்து, ஏர் - இந்தியா பங்கு விற்பனை விவகாரத்தில், விரைவில் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளுக்கான சட்டதிட்டங்களை தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் முதலீடுகளை கவர்ந்திழுக்கவும், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

-- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
08-டிச-201914:36:32 IST Report Abuse
dandy உலகில் கிழவிகள் பணிப்பெண்களாக வேலை செய்யும் இந்த நிறுவனத்தை ...பழைய இரும்பு வியாபாரி கூட வணக்க பல முறை யோசிப்பான்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-டிச-201905:37:32 IST Report Abuse
 Muruga Vel ஏர் இந்தியா கம்பெனியை ஒழித்து கட்ட முக்கிய காரணம் பிரபுல் படேல் … ஏர்இந்தியா ஊழியர்கள் ரிட்டையர் ஆன பிறகும் மனைவி மற்றும் மகன் மகளுக்கு இலவச பயணம் செய்ய பாஸ் தருவதும் ஒரு காரணம் ..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
08-டிச-201921:51:42 IST Report Abuse
Anandanஇந்த வழக்கம் பல விமான கம்பனிகளில் இருந்தது....
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201905:19:33 IST Report Abuse
J.V. Iyer இதை இருவது ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்திருக்கவேண்டும். சரியான நிர்வாகம் இல்லை. நேர்மையான தொழிலாளர்கள் இல்லை. ஒருமுறை ஏர் இந்தியாவில் பயணித்து இருந்தால் எவ்வளவு மட்டமான நிறுவனம் ஏர்லைன்ஸ் என்று தெரியவரும். கெட்டகனவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X