உன்னாவ் குற்றவாளிகளை தூக்கிலிடுங்க! பெற்றோர் ஆவேசம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (5+ 362)
Advertisement
உன்னாவ், பெண் பலாத்காரம், தூக்கிலிடுங்க, ஆவேசம், பெற்றோர், குற்றவாளி, உ.பி அரசு, இழப்பீடு, பிரியங்கா, ஆறுதல்

புதுடில்லி : 'உன்னாவ் பலாத்கார குற்றவாளிகளை, ஐதராபாதில் நடந்தது போல், சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது துாக்கிலிட வேண்டும்' என, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆவேசமாக கூறினர். இந்த விவகாரத்தில், உத்தர பிரதேச அரசு மீது, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரித்து, உடனடியாக தீர்ப்பு வழங்கும் என, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உன்னாவ் நகரில், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த, 23 வயதான இளம் பெண், விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட, ஐந்து பேர் கும்பலால், பெட்ரோல் ஊற்றி, தீவைத்து எரிக்கப்பட்டார்.


உரிமை இல்லை


இதில், 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார், 40 மணி நேர போராட்டத்திற்குப் பின், அந்தப் பெண், நேற்று முன்தினம் இரவு இறந்தார். பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பின், உன்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இறந்த பெண்ணின் பெற்றோர், மற்றும் குடும்பத்தினர் கூறியதாவது: எங்கள்மகளின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு, இந்த பூமியில் வாழ, எந்த உரிமையும் இல்லை. ஐதராபாதில், பலாத்கார குற்றவாளிகளை, 'என்கவுன்டர்' மூலம், சுட்டுக் கொன்றது போல், இவர்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும்;

இல்லாவிடில், உடனடியாக துாக்கிலிட வேண்டும். எங்களுக்கு, பணம் உட்பட, எந்த உதவியும் தேவையில்லை. குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி தான் தேவை. குற்றவாளிகள் கொல்லப்பட்டால் தான், எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும்; அவரது ஆத்மா சாந்தியடையும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'உன்னாவ் பலாத்கார சம்பவத்துக்கு, உத்தர பிரதேச அரசு தான் காரணம்' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டு, லக்னோவில், சட்டசபை வளாகம் முன், முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தீர்வாகாது அப்போது பேசிய அவர், ''உத்தர பிரதேசத்துக்கு இது, கறுப்பு நாள். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநில அரசு பாதுகாப்பு வழங்கவில்லை. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு, எந்த உதவியும் தீர்வாகாது,'' என்றார். முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கூறுகையில், ''உன்னாவ் சம்பவத்தில், பெண் இறந்தது வருத்தமாக உள்ளது. ''அவரது குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க, உ.பி., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உ.பி., மட்டுமின்றி, நாடு முழுவதும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க, கடும் சட்டம் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ''பெண் இறந்தது, மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு, என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும், கைது செய்யப்பட்டுள்ளனர். 'இந்த வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரித்து, உடனடியாக தீர்ப்பு வழங்கும். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக, 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என்றார்.


பலாத்கார வழக்குகளுக்கு உடனடி தீர்வு


பலாத்கார வழக்குகளை உடன் விசாரித்து, தீர்வு காண்பதற்கான வழிகளை ஆய்வு செய்ய வேண்டும் வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: பலாத்கார சம்பவம் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரித்து, தீர்ப்பளிப்பதற்கான வழிமுறைகள் பற்றி, ஆய்வு செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை, நாம் நிலை நிறுத்த முடியும்.

இதற்கு தேவையான உதவிகளை, அரசு செய்ய தயாராக உள்ளது. நாட்டில், 704 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைதவிர, 'போக்சோ' சட்ட வழக்குகளை விசாரிக்க, 1,123 நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே, பலாத்கார வழக்குகளில், குற்றவாளி களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.


'பலாத்கார தலைநகர் உத்தர பிரதேசம்'


'நாட்டில், பலாத்காரங்களுக்கான தலைநகராக, உத்தர பிரதேசம் மாறிவிட்டது' என, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில், சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது, நாட்டில் பலாத்காரங்களுக்கான தலைநகராக, உ.பி., மாறிவிட்டது. உன்னாவ் சம்பவத்துக்கு பிறகாவது, மாநில அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், உ.பி.,யில் வசிப்பதற்கே பெண்கள் அச்சம் அடைவர்.

வெறும் வாக்குறுதி அளிப்பதை விட்டுவிட்டு, சட்டம், ஒழுங்கை சீரமைக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னாவ் குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ., மூத்த தலைவர்களும் மவுனம் காத்து வருகின்றனர். காங்., ஆட்சி நடந்த போது, இது போன்ற சம்பவங்களுக்காக தெருக்களில் இறங்கி போராடியவர்கள், இப்போது மவுனம் காப்பதற்கான காரணம் தெரியவில்லை. இவ்வாறு சுப்ரீயா ஸ்ரீநேத் கூறினார்.

காங்., பொதுச் செயலர் பிரியங்கா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருந்ததாவது: உன்னாவில் ஏற்கனவே நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். உபி.,யில், அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க, அரசு என்ன செய்யப் போகிறது என தெரியவில்லை. அப்பெண்ணுக்கு நீதி வழங்க முடியாமல் போனதற்கு, நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவுக்கு நேற்று சென்ற பிரியங்கா, உன்னாவுக்கு சென்று, இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், காங்., தலைவர்கள் பலரும் சென்றிருந்தனர்.


மகள் மீது பெட்ரோல் ஊற்றி தாய் ஆர்ப்பாட்டம்


உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இறந்ததை கண்டித்து, டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு வெளியே, தன் மகள் மீது பெட்ரோலை ஊற்றி, ஒரு பெண் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்குங்கள்' என, அவர் கோஷமிட்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், தாயை சமாதானப்படுத்தி, மகளை மீட்டனர். பின், அந்தப் பெண் கூறுகையில், 'உன்னாவ் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அதனால்தான், என் எதிர்ப்பை தெரிவிக்க, மகள் மீது பெட்ரோல் ஊற்றினேன்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 362)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
08-டிச-201921:55:11 IST Report Abuse
Anandan ஆளும் கட்சி எம்எல்ஏ தானே இதற்க்கு காரணம். அதை செய்தியில் தவிர்க்க காரணம் என்ன? மத்த கட்சியினர் செய்யும் சிறு தவறையும் பெரிய செய்தியாக போடுவது ஆளும் கட்சியினரின் இந்த பெரும் தவறுகளை மறைக்க முயல்வது தர்மம் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
08-டிச-201915:02:54 IST Report Abuse
dandy பாருக்குள்ளே நல்ல நாட்டு எங்கள் பாரத நாடு ...உலகில் கற்பழிப்பில் முன்னணி நகரம் டெல்லி
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
09-டிச-201904:02:11 IST Report Abuse
Rayபொள்ளாச்சி?...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201905:24:59 IST Report Abuse
J.V. Iyer இந்த குற்றவாளிகளை ஹைதெராபாத் அழித்து சென்று விசாரியுங்கள்.உடனே நீதி கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X