பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை

Added : டிச 07, 2019
Advertisement
 ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 9,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், பரிசலில் செல்லவும், குளிக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், தமிழக - கர்நாடக எல்லை பகுதி மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, வினாடிக்கு, 8,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 8,000 கன அடியாக குறைந்துள்ளது.அதிக நீர்வரத்தால், மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று, 122வது நாளாக, ஆற்றில், பொதுமக்கள் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித் துள்ளது. அதேபோல் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X