சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலுாரில் பூமிக்குள் உள்வாங்கிய கிணறுகள்

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அரியலுாரில் பூமிக்குள் உள்வாங்கிய கிணறுகள்

பெரம்பலுார்: தொடர் மழை காரணமாக, அரியலுார் அருகே, மூன்று கிணறுகள், பூமிக்குள் உள்வாங்கியுள்ளன.

அரியலுார் மாவட்டம், விளந்தை கிராமத்தைச் சேர்ந்தோர் சங்கர், 50, இளங்கோவன், 45. இவர்களின் வீடுகளில், கிணறுகள் உள்ளன. ஒரு வாரமாக, அரியலுார் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இதனால், இரண்டு கிணறுகளிலும், தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், திடீரென இரண்டு கிணறுகளும் உள்வாங்கின.

இதே போல, குமிழியம் கிராமத்தில், காளியம்மன் கோவில் அருகில் உள்ள, அரசுக்கு சொந்தமான குடிநீர் கிணறும், பூமிக்குள் உள்வாங்கியது.இத்தகவலறிந்த, இந்த சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பூமிக்குள் உள்வாங்கிய கிணறுகளை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துச் செல்கின்றனர். கலெக்டர் ரத்னா உட்பட, அரசு அதிகாரிகளும் கிணறுகளை பார்வையிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashwanth - TIRUCHIRAPPALLI,இந்தியா
12-டிச-201915:51:33 IST Report Abuse
Ashwanth இயற்கை தன் அறிகுறியை பல இடங்களில் காட்டுகிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X