சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விசாரணையால் இளைஞர் தற்கொலை

Added : டிச 08, 2019
Advertisement

பனமரத்துப்பட்டி: மகளிர் போலீசார் விசாரித்ததால், இளைஞர் தற்கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த, திப்பம்பட்டியைச் சேர்ந்தோர், சதீஷ்குமார், 23, சீனிவாசன், 22; இருவரும் நண்பர்கள். சீனிவாசனுக்கு திருமணமாகி, மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.இந்நிலையில், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த, 17 வயது செவிலியருடன், சீனிவாசன், கடந்த வாரம் மாயமானார்.

இது குறித்து, சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம், திப்பம்பட்டி வந்த மகளிர் போலீசார், சீனிவாசன் குறித்து விசாரிக்க, சதீஷ்குமாரை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.இரவு, 11:00 மணிக்கு வீடு திரும்பிய சதீஷ்குமார்,மனவேதனையுடன் இருந்தார். நேற்று காலை, பெற்றோர், அரளிப்பூ பறிக்கும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் அவர், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இறக்கும் முன், அவர் எழுதிய கடிதத்தில், 'அவனே தான், அந்த பொண்ணை கூட்டிட்டு போனான். ஆனாலும், என்னைத் தான், தப்பு சொல்றாங்க... எனக்கு, ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் போகிறேன்' என, எழுதப்பட்டிருந்தது.சதீஷ்குமார் தற்கொலை குறித்து, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X