சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கொலை, தற்கொலை, பலி

எலி மருந்தை தின்ற சிறுமி பலி
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர், செந்தில்குமார்; கூலித்தொழிலாளி. இவரின் மகள் ரியாஷினி, 5. கடந்த, 1ல், வீட்டின் சமையலறையில் இருந்த, எலி மருந்தை, 'பிஸ்கட்' என நினைத்து, சிறுமி தின்று விட்டார். மயங்கிய சிறுமியை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று சிறுமி இறந்தார்.இது குறித்து, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் மர்ம சாவு
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் மனைவி பிரேமசத்யா, 28. திருமணமாகி, ஐந்து ஆண்டுகளாகியும், குழந்தை இல்லாததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பிரேமசத்யா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. பிரேமசத்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீசார் பேச்சு நடத்தி, கலைந்து போக செய்தனர். பாடாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் தந்தை, மகள் மரணம்
கடலுார்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம், ஆயர் மட தெருவைச் சேர்ந்தவர், வேல்முருகன், 42; நகை அடகுக்கடை உரிமையாளர். இவரது மகள் திவ்யபிரியா, 22; பி.டெக்., முடித்து, வங்கி வேலைக்கு முயற்சி செய்து வந்தார். நேற்று, திருச்சியில் நடக்கும் வங்கி தேர்வில் பங்கேற்க, அதிகாலையில், தந்தையும், மகளும், இருசக்கர வாகனத்தில், வேப்பூருக்கு புறப்பட்டனர். அதிகாலை, 4:30 மணியளவில், ஏ.சித்துார் மின் நிலையம் அருகே வந்த போது, எதிரே வந்த ஷேர் ஆட்டோ மோதியதில், இருவரும் இறந்தனர். வேப்பூர் போலீசார், விபத்து ஏற்படுத்திய, ஆட்டோ ஓட்டுனரான, விருத்தாசலத்தைச் சேர்ந்த, முகமது சலீம் ஷெரீப், 25, என்பவரை கைது செய்தனர்.

பெண் எரித்து கொலை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர், நடராஜன்; ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். இவருக்கு, இரண்டு மனைவிகள். முதல் மனைவி, இந்திரா, 56, உடன், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள சுதாகர் நகரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு, பிள்ளை இல்லை. இரண்டாவது மனைவியை பார்க்க சென்ற நடராஜன், நேற்று காலை, 11:00 மணியளவில், இந்திரா வீட்டிற்கு வந்தார். அப்போது, படுகாயங்களுடன், முகம் எரிக்கப்பட்ட நிலையில், இந்திரா இறந்து கிடந்தார்.விழுப்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரையொதுங்கிய உடல்கள்
நாகை: கோயம்புத்துார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், 18 - 25 வயதுக்குட்பட்ட, ஏழு பேர், 3ம் தேதி வேளாங்கண்ணி வந்தனர். தனியார் லாட்ஜில், அறை எடுத்து தங்கினர்.நேற்று முன்தினம் மாலை, திண்டுக்கல்லைச் சேர்ந்த, பிரகாஷ், 22, மணி, 20, கோவை நரசிம்மன், 18, சிவகங்கை கண்ணன், 23, ஆகியோர் கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, நால்வரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்த மீனவர்கள், அலையில் சிக்கிய கண்ணனை காப்பாற்றினர். மற்றவர்களை, காப்பாற்ற முயன்றனர் முடியவில்லை.நேற்று காலை, வேளாங்கண்ணி அருகே நரசிம்மன், பிரகாஷ் சடலங்கள் கரை ஒதுங்கியது. இருவரது சடலங்களையும், கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் கைப்பற்றி, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கிய மணி என்பவரை, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
13-டிச-201915:14:34 IST Report Abuse
dandy சொரியார் காட்டிய பகுத்தறிவு நன்றாக வேலை செய்கின்றது டாஸ்மாக் நாட்டில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X