சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவதுாறு பரப்பியவர் கொலை கணவருடன் சரணடைந்த பெண்

Added : டிச 08, 2019
Advertisement

உத்தமபாளையம்: தன் மீது அவதுாறு பரப்பிய உறவினரை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த பெண், தன் கணவருடன், போலீசில் சரணடைந்தார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே, வேப்பம்பட்டியில் வசிப்பவர், பாண்டீஸ்வரன், 28. இவரின் மனைவி நிரஞ்சனா, 25. வாழை இலை விற்பனை செய்கின்றனர்.பாண்டீஸ்வரனின் அக்கா ராஜேஸ்வரி, 30, தன் கணவர் மணிகண்டன், 35, என்பவருடன், ராயப்பன்பட்டியில் வசித்து வந்தார்.மணிகண்டன், தன் நண்பர்களிடம், நிரஞ்சனா தன்னுடன், மொபைல்போனில், அந்தரங்கமாக பேசுவதாக, அவதுாறு பரப்பினார்.இதையறிந்த பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவுடன், தகராறு செய்தார்.ஆத்திரமடைந்த நிரஞ்சனா, தன் கணவருடன், நேற்று காலை, ராயப்பன்பட்டி சென்றார். அங்கு மணிகண்டனிடம், அவதுாறு பரப்புவது தொடர்பாக, ஆவேசமாக கேட்டார்.மேலும் நிரஞ்சனா, அரிவாளால், மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த ராஜேஸ்வரிக்கும், விரலில் காயம் ஏற்பட்டது.படுகாயமடைந்த மணிகண்டன், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். ராஜேஸ்வரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நிரஞ்சனா, தன் கணவர் பாண்டீஸ்வரனுடன், ராயப்பன்பட்டி போலீசில் சரணடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X