சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீ வைப்பு

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீ வைப்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த, 20 ஆண்டு கால ஆவணங்களுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மேலக்கொட்டையூரில், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில், வி.ஏ.ஓ.,வாக, அசாரூதின் என்பவர் பணியாற்றி வருகிறார். நாககுடி கிராம நிர்வாக அலுவலகம் இடியும் நிலையில் இருப்பதால், அந்த வி.ஏ.ஓ., பாலமுரளியும், மேலகொட்டையூர் அலுவலகத்தில் ஆவணங்களை பராமரித்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு, மர்மநபர்கள் தீவைத்து தப்பினர்.தகவலறிந்த, கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு சென்று, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 20 ஆண்டுகளுக்கான, கிராம நிர்வாக கணக்குகளின் ஆவணங்கள் நாசமடைந்தது. இது குறித்து, வி.ஏ.ஓ., அசாரூதின் கொடுத்த புகார்படி, கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201907:49:00 IST Report Abuse
Bhaskaran இவனுகளே வச்சிருப்பானுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X