சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் வனப்பகுதியில் பொதுமக்களை விரட்டிய ஒற்றை யானை

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஓசூர் வனப்பகுதியில்  பொதுமக்களை விரட்டிய ஒற்றை யானை

ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில், தற்போது, 85க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை, பொதுமக்களை விரட்டிச்சென்று தாக்க முயன்றது.

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வழியாக, தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதிக்கு, 90க்கும் மேற்பட்ட யானைகள் சமீபத்தில் இடம் பெயர்ந்தன. அங்கிருந்து வெளியேறிய யானைகளில், 25க்கும் மேற்பட்டவை, ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு வனப்பகுதியிலும், 60க்கும் மேற்பட்ட யானைகள், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கும் சென்றன.

நேற்று காலை, லிங்கனம்பட்டி அருகே முகாமிட்டிருந்த, 60க்கும் மேற்பட்ட யானைகள், விவசாய நிலத்திற்கு வந்து விடாமல் தடுக்க, விவசாயிகள் விரட்டினர்.அப்போது, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை, பொதுமக்களை சிறிது துாரம் விரட்டிச்சென்று தாக்க முயன்றது. பொதுமக்கள் தப்பியோடி, உயிர் தப்பினர்.தேவசமுத்திரம் வழியாக சென்ற யானைகள், பெரிய மெட்டரை அருகே முகாமிட்டன. யானைகள் செல்லும் வழியில், சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், முட்டைக்கோஸ், கேழ்வரகு பயிர்களை நாசமாக்கின.ஓசூர் மற்றும் சூளகிரி வனத்துறையினர், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
08-டிச-201906:46:06 IST Report Abuse
 nicolethomson யானைகள் செல்லும் வழியையும் அபகரித்தது தப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X