மனோலி தீவில் வெடிமருந்து பெட்டி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனோலி தீவில் வெடிமருந்து பெட்டி

Added : டிச 08, 2019
Share
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியில், மனோலி தீவில், வெடி மருந்து பெட்டி கண்டெடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமேஸ்வரம் அருகே, மன்னார் வளைகுடா பகுதியில், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களின், 21 தீவுகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து, 2.5 கி.மீ.,யில், 26 ஹெக்டேரில் உள்ள மனோலி தீவு உள்ளது.இந்த தீவு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு யாரும் தங்கி,
 மனோலி தீவில் வெடிமருந்து பெட்டி

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியில், மனோலி தீவில், வெடி மருந்து பெட்டி கண்டெடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமேஸ்வரம் அருகே, மன்னார் வளைகுடா பகுதியில், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களின், 21 தீவுகள் உள்ளன.

ராமேஸ்வரத்தில் இருந்து, 2.5 கி.மீ.,யில், 26 ஹெக்டேரில் உள்ள மனோலி தீவு உள்ளது.இந்த தீவு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு யாரும் தங்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இந்த தீவில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக, வருண்குமார் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் தலைமையில் போலீசார், மனோலி தீவுக்கு சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், காலி மது பாட்டில்கள், கஞ்சா கடத்தலில் பயன்படும், 'பிளாஸ்டிக் கவர்' மற்றும் வெடி மருந்து பெட்டி ஒன்றையும் கண்டுபிடித்தனர்.

இது குறித்து வருண்குமார் எஸ்.பி., கூறியதாவது:மனோலி தீவில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சோதனையிட்டபோது, வெடி மருந்து பெட்டி ஒன்று, பாதி புதைந்த நிலையில் கிடந்தது. இதை சோதனை செய்வதற்கு, வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த பின், மற்ற தகவல்கள் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X