சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வீட்டில் ரகளையில் ஈடுபட்டவர் யார்?

Added : டிச 08, 2019
Share
Advertisement
ஆர்.ஏ.புரம்:முதல்வர் வீட்டில், பாதுகாப்பு போலீசாரை தாண்டி, உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டு, தப்பிச் சென்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில், முதல்வர் இ.பி.எஸ்., வீடு உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மதுபோதையில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், போலீஸ் பாதுகாப்பை மீறி உள்ளே சென்றுள்ளார்.பின்,

ஆர்.ஏ.புரம்:முதல்வர் வீட்டில், பாதுகாப்பு போலீசாரை தாண்டி, உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டு, தப்பிச் சென்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில், முதல்வர் இ.பி.எஸ்., வீடு உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மதுபோதையில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், போலீஸ் பாதுகாப்பை மீறி உள்ளே சென்றுள்ளார்.பின், தான் பத்திரிகையாளர் எனக் கூறி, ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பாதுகாப்பு போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோது, அங்கு நின்ற காரில் தப்பினார்.இது குறித்து ஆர்.ஏ. புரம் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மீரான் என்பவருடைய கார் என்பது தெரிய வந்தது.தொடர்ந்து, ரகளையில் ஈடுபட்டவர் யார், எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும், முதல்வர் வீட்டிற்குள், போதை ஆசாமி நுழைந்து, ரகளையில் ஈடுபட்ட சம்பவம்,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X