போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: போலீசார் வழக்கு

Added : டிச 08, 2019
Share
Advertisement

மூணாறு, :மூணாறில் இறந்தவர் உடலுடன் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் மது போதையில் விபத்துகளை ஏற்படுத்தியதால், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 21. டிச. 5ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் நேற்று முன்தினம் மாலை வட்டவடை ஊராட்சிக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்சில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. கோவிலுாரைச் சேர்ந்த தங்கராஜ் 42, அதனை ஓட்டினார்.மூணாறு-- மாட்டுப்பட்டி ரோட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த காரில், ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் கார் லேசாக சேதமடைந்த நிலையில், பக்தர்கள் காயம் இன்றி தப்பினர். அதன்பிறகு மாட்டுப்பட்டி, எக்கோ பாய்ன்ட் பகுதியில் ஆம்புலன்ஸ் மோதியதில் நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயமடைந் தார். மூணாறு போலீசார் தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டியதாக தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X