அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை: ஸ்டாலின்

Updated : டிச 10, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (13+ 35)
Advertisement
 நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை: ஸ்டாலின்

சென்னை : 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வார்டு வரையறை மற்றும் இட ஒதுக்கீட்டை செய்து முடித்த பிறகே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென நீதி கேட்டு, மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழியில்லை' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:'பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும், வார்டு மறு வரையறையையும், சட்ட விதிமுறைப்படி செய்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்று தெளிவாக, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட விதிகள் எதையும் பின்பற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அ.தி.மு.க., அரசின் கைப்பிள்ளையாக, மாநில தேர்தல் ஆணையர் மாறியிருப்பது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடு; துடைக்க முடியாத இழுக்கு.சம்மதம்உச்ச நீதிமன்ற தீர்ப்பை, மாநில தேர்தல் ஆணையம் படிக்கவில்லை.

அந்த தீர்ப்பில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தலை நடத்துவதாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சம்மதம் தெரிவித்துஇருக்கிறார்' என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசும் கவனம் செலுத்தவில்லை. தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள உத்தரவு மற்றும் சட்ட விதிகள் அனைத்தையும் விளக்கி, மனு கொடுக்கப்பட்டது. அதையும், தேர்தல் ஆணையர் படிக்கவில்லை. முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரின் சொல்கேட்டு நடக்கும், அ.தி.மு.க., கிளை செயலர் போல், தேர்தல் ஆணையர் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பழைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன், அரசியல் கட்சிகளை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. அரசியல் சட்டத்திற்கும், பஞ்சாயத்து சட்டங்களுக்கும் புறம்பாக, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 'யாராவது சென்று தடை வாங்கி கொள்ளட்டும்' என்ற நோக்கத்துடன், தேர்தல் அறிவிப்பை வெளியிட, மாநில தேர்தல் ஆணையரோ, தலைமை செயலரோ தேவையில்லை.கைகோர்ப்புஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது. அதேநேரம், தேர்தல் அறிவிப்பில், அ.தி.மு.க., அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கைகோர்த்து செய்துள்ள, ஜனநாயக படுகொலையை, நிச்சயம் வேடிக்கை பார்க்க முடியாது.

எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறு வரையறை மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றை செய்து முடித்த பிறகே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு, மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.ஆணையத்திடம்தி.மு.க., மனு'உள்ளாட்சி தேர்தலில், பட்டியலினம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும், வார்டு மறு வரையறையையும், சட்ட விதிமுறைப்படி செய்து, தேர்தல் அறிவிப்பு வெளி யிட வேண்டும்' என, தி.மு.க., சார்பில், கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையத்தில், மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரம் மற்றும் சட்ட விதிகள் எடுத்துரைக்கப்பட்டு, அதன்படி தேர்தல் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-டிச-201903:26:47 IST Report Abuse
meenakshisundaram ஏதோ ,இத்தனை ஆண்டுகள் கழித்து உள்ளாட்சி தேர்தல் வருதே ,அதில் நின்னு பார்ப்போமே இன்னு நினைக்காம அதை இழுத்தடிக்க ஸ்டாலின் சொல்லும் காரணம் -அண்னே,அண்னே வாயிலே புண்ணு அதுனாலே பால் கறக்க முடியல
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201917:53:00 IST Report Abuse
ravichandran எடப்பாடி பழனிச்சாமி கிட்ட அடிவாங்கி அடிவாங்கி சுடலைக்கு பித்தம் தலைக்கு ஏறிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
08-டிச-201917:21:58 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தெரியுமே. தோல்வியில் உளறும் சுடலை கட்டாயம் கோர்ட்டுக்குப் போய் வழக்கப்படி கழகத் தொழிலான தகிடுதத்தம் செய்து தேர்தலை நடத்த விட மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X