'இரண்டாவது சுதந்திர போராட்டம்' ; குடியுரிமை மசோவிற்கு மம்தா எதிர்ப்பு

Updated : டிச 10, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 'இரண்டாவது சுதந்திர போராட்டம்' ; குடியுரிமை மசோவிற்கு மம்தா எதிர்ப்பு

கோல்கட்டா : மத்திய அரசு கொண்டு வரவுள்ள, குடியுரிமை திருத்த மசோதாவை, 2021 சட்டசபை தேர்தலுக்கு ஆயுதமாக பயன்படுத்த, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இந்த மசோதாவை முன்வைத்து, பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரத்தை முடுக்கிவிட, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. வரும், 2021ல் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கடந்த, இரண்டு லோக்சபா தேர்தல்களில், மாநிலத்தில் பா.ஜ.,வுக்கான செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியது. பதிவேடு கணக்கெடுப்புமொத்தமுள்ள, 42 தொகுதிகளில், இந்தாண்டு நடந்த தேர்தலில் பா.ஜ., 18ல் வென்றது. கடந்த தேர்தலில், இரண்டில் மட்டுமே வென்றிருந்தது.வட கிழக்கு மாநிலமான அசாமில், குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், பலருடைய பெயர்கள் விடுபட்டன. இதில், ஹிந்துக்களே அதிகம் என்பதும், குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த சூழ்நிலையில், தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட உள்ளது.

ஹிந்து, சீக்கியர், பார்சி உள்ளிட்டோருக்கு இந்த வாய்ப்பு தரப்பட உள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது என, வட கிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல், வங்கதேசத்துடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்கத்திலும், முஸ்லிம் அகதிகள் அதிகம் உள்ளனர். அதனால், மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இந்த சூழ்நிலையில், கோல்கட்டாவில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், மம்தா பேசியதாவது: நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைக்கவில்லை.


தீவிர பிரசாரம்


அதே நேரத்தில், நாட்டின் சுதந்திரத்திற்கான இரண்டாவது போரில் பங்கேற்க நமக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தீவிரமாக எதிர்ப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.இது குறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவர்கள் கூறியதாவது:குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு விவகாரத்துக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில், அமோக வெற்றி பெற்றோம்.

இது, பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவாகும்.தற்போது, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தீவிரமாக உள்ளது. மேற்கு வங்கத்தில், குறைந்த பட்சம், 120 தொகுதிகளில், சிறுபான்மையினரும், அகதிகளும் அதிகளவில் உள்ளனர். வரும், 2021ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், இந்தத் தொகுதிகள், எந்தக் கட்சியின் ஆட்சி என்பதை நிர்ணயிக்கும்.அதனால், மத்திய அரசின் புதிய மசோதாவை எதிர்த்து, தீவிர பிரசாரம் மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம்.

அதன் ஒரு துவக்கம் தான், மம்தாவின் பேச்சு. இந்த மசோதா தான், எங்களுக்கு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலின் முக்கிய துருப்பு சீட்டு.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'பதில் இல்லை'மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கவர்னர் தங்கர் கூறியுள்ளதாவது:மாநில முதல்வரும், கவர்னரும் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும்;

ஆனால், அது நடைபெறவில்லை. அதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பேச்சு நடத்துவதற்கு அழைப்பு விடுத்தேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. மம்தாவிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ் சென்னை குடியுரிமை போனால் பரவாயில்லை ஓட்டுரிமை போயிடும்.அதான் பிரச்சினை..அய்யோ பாவம்..
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
08-டிச-201919:21:05 IST Report Abuse
a natanasabapathy Intha pombala ikku ithuve muzhunera velai seekkiram veettukku anuppunkappaa
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-டிச-201917:32:24 IST Report Abuse
Endrum Indian அது மட்டும் வந்திச்சீ?? இந்த கள்ளக்குடியேறிகளின் சங்கத்தலைவிக்கு கஷ்டம் ஆகவே தான் இந்த பிதற்றல்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X