பொது செய்தி

இந்தியா

24 மணிநேரமும் நெப்ட் ஆன்லைன் சேவை: ரிசர்வ் வங்கி முடிவு

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (6)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நெப்ட் சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரத்திற்கும் கொண்டு வர ரிசர்வ வங்கி முடிவு செய்துள்ளது.






நெஃப்ட் எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை வார வேலை நாட்களில் மட்டும் செயல்படுகிறது. அதுவும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே. சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 வரை செயல்பட்டது. இனிமேல் நெஃப்ட் சேவையை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுத்த ரிசர்வ் பேங்க் முடிவு எடுத்துள்ளது. விடுமுறை நாட்களிலும் இது செயல்படும். டிசம்பர் 16 முதல் இந்த ஏற்பாடு அமலுக்கு வருகிறது. ஜூலை 1ல் இருந்து நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் பண பரிமாற்றங்களுக்கு கட்டணம் கிடையாது என்பது நினைவிருக்கலாம்.

நெப்ட் எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை தற்போது வாரத்தின் வேலை நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. வேலைநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே இச்சேவை கிடைத்து வந்தது. சனிக்கிழமை மட்டும் காலை 8 மணி தொடங்கி மதியம் 1 வரை இச்சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. இச்சேவையில் பலருக்கும் ஆர்வம் இருந்ததால் வார இறுதிநாட்களிலும் இரவு நேரங்களில் இதை பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது.

இந்த குறையை போக்கும் விதமாக நெப்ட் சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமமும் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. டிசம்பர் 16 முதல் நெப்ட் பணபரிமாற்ற சேவையை அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சேவையை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும்படியும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





கடந்த ஜூலை 1 முதல் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., ஆன்லைன் பணபரிமாற்றங்களுக்கான சேவை கட்டணங்களை ரத்து செய்து அறிவித்திருந்த நிலையில் நெப்ஃட் சேவை வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட இருப்பதால் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
08-டிச-201916:27:03 IST Report Abuse
பெரிய ராசு எல்லா பாங்குலயும் NEFT/ //RTGS க்கு சேவை வரி (கமிஷன்) வசூலிக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
08-டிச-201915:39:34 IST Report Abuse
Lawrence Ron Until today no bank stopped collecting IMPS/NEFT charges for each transaction
Rate this:
Share this comment
Cancel
VASEEGARAN - BANGALORE,இந்தியா
08-டிச-201914:46:22 IST Report Abuse
VASEEGARAN இன்னும் கனரா பாங்கில் நெப்ட் ட்ரான்ஸாக்ஷன்க்கு சேவை கட்டணம் வாங்கிட்டு தான் இருக்காங்க. இங்க நியூஸில் ஜூலை 1 முதல் நெப்ட் ட்ரான்ஸாக்ஷன் பிரீன்னு சொல்றாங்க. ஒண்ணுமே புரியல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X