அரசியல் செய்தி

தமிழ்நாடு

மன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (62+ 24)
Advertisement
மன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம்

சென்னை : ''என் மன உறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காக தான், சிறையில் அடைத்தனர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

'ஐ.என்.எக்ஸ்., மீடியா' ஊழல் வழக்கில் கைதான, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின், சமீபத்தில், ஜாமினில் வந்தார். அவர் டில்லியில் இருந்து, விமானம் வாயிலாக, நேற்று பிற்பகலில் சென்னை வந்தார். அவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின், நிருபர்களிடம், சிதம்பரம் கூறியதாவது:நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால், அனைத்து மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டதற்கு ஈடாகும். பாசிச அரசு முறையை நோக்கி, நாடு செல்கிறது.மக்கள் அனைவரும், எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். தமிழக மக்கள் காட்டும் எச்சரிக்கையை போல், அனைத்து மாநில மக்கள், எப்போது காட்டுகின்றனரோ, அப்போது, உண்மையிலேயே சுதந்திர நாடாக மாறும்.பா.ஜ.,வை கடுமையாக எதிர்ப்பது, தமிழக மக்கள் தான். என் மன உறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காக தான் சிறையில் அடைத்தனர்.

என் மன உறுதி, ஒரு நாளும் குறையாது.இந்திய பொருளாதாரம், மோசமான நிலைக்கு செல்கிறது. நிர்பயா நிகழ்வுக்கு பின், மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றபோது, பட்ஜெட்டில், 3,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினேன்.அந்த நிதியை, பெண்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழகம் உட்பட, பல மாநிலங்கள், நிர்பயா நிதியை பயன்படுத்த வில்லை. பெண்களை மதிக்கும் நாட்டை, கொலைக்களமாக மாற்ற கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (62+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
08-டிச-201922:30:27 IST Report Abuse
R. Vidya Sagar கூட்டத்தில் எந்தெந்த கோஷ்டியில் இருந்து எதனை பேர் வந்தார்கள் என்ற முக்கியமான தகவல் இல்லையே.
Rate this:
Share this comment
Cancel
Balasubramanyan S - chennai,இந்தியா
08-டிச-201921:19:18 IST Report Abuse
Balasubramanyan S People knows about this goods family but sad the court could not gauge this wicked fellow and his family. Encounter to common people and not to these economic offers. How he and his son transferred the money to his g. Daughter through one of his ghost companies. He cheated the court and Singh I and Kabul prostrate before the judges that hydrabad doctor alone can treat him and he is failing health. But after coming from jail this fellow talks that he is fine. Court should note his press meet and put him again to jail. Crocodile tears about crook Abdullah who is a tractor and terrorist against India. Don't know why these media is giving importance to him .tired to See and read all his rubbish talks. Request Dinamalar to boycott this fellow.
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
08-டிச-201919:22:40 IST Report Abuse
a natanasabapathy Adikkira kollai kalai yellaam adithuvittu vaai kozhuppu kku panchamillai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X