எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் வெங்காயம் விற்பனை தடைவிதிக்க அரசுக்கு கோரிக்கை

Added : டிச 08, 2019
Advertisement
ஆன்லைனில் வெங்காயம் விற்பனை தடைவிதிக்க அரசுக்கு கோரிக்கை

'வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த, அவற்றின் ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகளுக்கு, ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், சிறியவை, நடுத்தரம், பெரியவை என, ஒரு லட்சம் உணவகங்கள் செயல்படுகின்றன. அங்கு, சட்னி, சாம்பார், பொறியல், கூட்டு என, பல வகை உணவுகளுக்கும், பெரிய வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக, பிரியாணி, மட்டன், சிக்கன், மீன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளில், வெங்காயத்தின் பங்கு அதிகம்.தமிழகத்தில், அக்டோபரில், கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயத்தின் விலை, தற்போது, 200 ரூபாயை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.இதனால், இல்லத்தரசிகள் மட்டுமின்றி, ஓட்டல் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்ய, தடை விதிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு பின், தங்கம் போல, முக்கிய காய்கறியான வெங்காயத்தின் விலை, தினமும் உயர்ந்து வருகிறது.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் கேட்கும் சுவைக்கு, உணவு வகைகளை தொடர்ந்து வழங்க, அதிக விலைக்கு வெங்காயம் வாங்குகிறோம். இதனால், எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. சிறு ஓட்டல்கள் எல்லாம், மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், அதற்கு, தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதற்கு, வெங்காயம் உள்ளிட்ட முக்கிய உணவு பொருட்களை, சிலர் பதுக்கி, ஆன்லைன் வாயிலாக, அதிக விலைக்கு விற்பதே காரணம். ஐரோப்பிய நாடுகளில், முக்கிய காய்கறி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலையை, அரசே நிர்ணயம் செய்கிறது.

அவற்றில், பல நாட்களுக்கு மாறுதல் ஏற்படாது. எனவே, வெங்காயம் உள்ளிட்ட முக்கிய காய்கறிகள் மற்றும் முக்கிய உணவு தானியங்களை, இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு, அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X