7ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆசிரியையின் கணவர் கைது

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கோராபுட்: ஒடிசாவில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியையின் கணவர், பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து, தலைமை ஆசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வயிறு வலிஒடிசா மாநிலத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோராபுட் மாவட்டம் ஜெயப்பூரில், பழங்குடியின மாணவியருக்கான அரசு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு, ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியையின் கணவர், ஒரு மாதமாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கி வந்துள்ளார். பள்ளி வளாகத்திலேயே, அங்கு பணியாற்றும் ஆசிரியைகளுக்கான விடுதி உள்ளது. அந்த மாணவியை, தலைமை ஆசிரியையின் கணவர், தினமும், இந்த விடுதிக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சமீபத்தில், அந்த மாணவி, வயிறு வலிப்பதாக கூறியதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது, அந்த மாணவி, மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியையின் கணவர், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யபட்டார். மாணவி, குழந்தைகள் நல காப்பகத்தில், பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:விடுதியில், ஆண்கள் தங்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறி, தலைமை ஆசிரியை, தன் கணவரை அங்கு தங்க வைத்ததால், இந்த விபரீதம் நடந்துள்ளது. நடவடிக்கைஇதற்காக, தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், மாணவியை, தன் கணவர் பாலியல் பலத்காரம் செய்தது, தனக்கு தெரியாது என, தலைமை ஆசிரியை கூறியுள்ளார். அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-டிச-201917:00:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni வேறுவழியே இல்லீங்க ப்ளீஸ் கொலையே செய்யணும் அந்த நாயை சித்ரவதை செய்து சாவடிக்கவேண்டும் பாவம் சின்னப்பொண்ணு என்ற இரக்கமே இல்லாது பத்திண்டுவரது ப்ளீஸ் விடாதீங்க போலீசு இந்த வெறிநாய்களுக்கெல்லாம் மரணம் தான் முக்கியம் நன்னா அடிச்சு உதைச்சு கொலையும் செய்யுங்க நடுரோட்டுலேயே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X