'என்கவுன்டர்' நடந்த இடத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணை

Added : டிச 08, 2019
Advertisement

ஐதராபாத்: ஐதராபாதில், நான்கு பேர், 'என்கவுன்டர்' செய்யப்பட்ட இடத்தில், தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில், பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்துக் கொன்றதாக, முகமது ஆரீப், சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய நான்கு பேர், சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்துவதற்காக, அவர்கள் நான்கு பேரையும், போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கி, தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, போலீசார் நடத்திய, 'என்கவுன்டரில்' நான்கு பேரும் பலியாகினர்.இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது. மனித உரிமை கமிஷன் அதிகாரிகள், நேற்று ஐதராபாத் வந்தனர். நான்கு பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை, என்கவுன்டர் நடந்த இடங்களுக்கு சென்று, விசாரணை நடத்தினர். இதற்கிடையே, என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களுக்கும் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது.

வழக்கின் முக்கியத்துவம் கருதியும், மேல் விசாரணைக்காகவும், நான்கு பேரின் உடல்களையும், நாளை வரை, மருத்துவமனையிலேயே வைத்திருக்கும்படி, தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதனால், நான்கு பேரின் உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், மெகபூப் நகர் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னதாக, குற்றவாளிகள் நான்கு பேரும், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக, அவர்கள் மீது, கொலை முயற்சி வழக்கை, சைபராபாத் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X