ஜப்பானில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு இந்திய பணியாளர்களுக்கு வரவேற்பு

Added : டிச 08, 2019
Advertisement
 ஜப்பானில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு இந்திய பணியாளர்களுக்கு வரவேற்பு

டோக்கியோ: மத்திய அரசின், 'டி.ஐ.டி.பி.,' எனப்படும் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, இந்தியாவில் இருந்து மூன்றுகட்டுமான தொழிலாளர்கள், பயிற்சியுடன் கூடிய பணியில் சேர, ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளனர்.

அவர்களை, ஜப்பானில் செயல்படும் இந்திய நிறுவனமான, ராஜ் குழுமத்தின் நிறுவனர், அனில் ராஜ் வரவேற்று, இந்திய துாதர், சஞ்சய் குமார் வர்மாவிடம் அறிமுகப்படுத்தினார்.இது குறித்து, அனில் ராஜ் கூறியதாவது:ஜப்பானில், கட்டுமானம், பொறியியல் உள்ளிட்ட, தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஆனால், அவற்றுக்கு தேவையான, பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அதை பயன்படுத்தி, இந்தியர்களுக்கு ஜப்பானில் வேலை பெற்றுத் தர மத்திய அரசு, 'டி.ஐ.டி.பி.,' திட்டத்தை உருவாக்கியது. கடந்த, 2017 அக்டோபரில், இந்தியா - ஜப்பான் இடையே, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தின் கீழ், ஜப்பான் நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து, அவற்றுக்குத் தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்து, பயிற்சி அளித்து, பணியில் நியமிக்கலாம். ஐந்தாண்டுகள், முழு ஊதியத்துடன் தொழிலாளர்கள் பணியாற்றலாம். அதன் பின், அவர்கள் விரும்பினால், இந்தியா திரும்பலாம் அல்லது வேறு தொழிலுக்கு, 'விசா' கோரலாம். தேர்வாகும் தொழிலாளர்களுக்கு, இந்தியாவிலேயே, ஜப்பான் மொழி பயிற்சி அளிக்கப்படும். இதன்படி, ராஜ் குழுமம், முதற்கட்டமாக, இந்தியாவைச் சேர்ந்த, மனோஜ் பிஸ்வாஸ், சுதிப் பிஸ்வாஸ், ரனித் கோஹில் என்ற மூன்று கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஜப்பான் மொழியில் பயிற்சி அளித்து, வரவழைத்துள்ளது.

அவர்களுக்கு, ஜப்பானில் ஒரு மாதம் தொழில் பயிற்சி தந்து, பணி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்தியரான, அனில் ராஜ், ஜப்பானில் ராஜ் குழுமத்தை நிறுவி, ஓட்டல், தகவல் தொழில்நுட்பம், சர்வதேச பள்ளி, ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட், சுற்றுலா, விளம்பரம், வலைதள சந்தை வர்த்தகம் என, பல்வேறு துறைகளில் கால்பதித்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.'வருங்கால இந்தியாவின் சிறந்த தொழில் முனைவர்' விருது வாங்கியவர். மிகச் சிறந்த உணவகங்களை நடத்தி வருவதற்காக, ஏழு முறை விருது பெற்றவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X