அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு: சவுதி வீரர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

Added : டிச 08, 2019
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த சவுதி அரேபிய ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்; எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய சவுதி அரேபிய வீரரும், அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா என்ற இடத்தில், அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்கு, வெளிநாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் பயிற்சி பெறுவது வழக்கம்.மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த ராணுவ வீரர் முகமது அல் சம்ரானி என்பவரும், மூன்று ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார்.

இவர், நேற்று அதிகாலை, கடற்படை தளத்தில் இருந்த அமெரிக்க வீரர்களை நோக்கி, துப்பாக்கியால் சுட்டார். இதில், நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, கடற்படை தளத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர், முகமது அல் சம்ரானியை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்துக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சவுதி மன்னர் சல்மானும், அமெரிக்க அதிபரை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். 'இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவோரை மன்னிக்க முடியாது' என, அப்போது அவர் கூறினார். இது குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க புலனாய்வு துறையினர் கூறியதாவது: சவுதியை சேர்ந்த அந்த ராணுவ வீரருக்கு, அமெரிக்கா மீது கடும் வெறுப்பு இருந்தது, அவரது சமூக வலைதள பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த பதிவுகளில், அமெரிக்காவை தீய சக்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆதரிப்பதாலும், அதற்கு தேவையான நிதி உதவி செய்வதாலும், அமெரிக்காவை வெறுப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இந்த சம்பவத்தை தீவிரவாத தாக்குதலாகத் தான் கருத வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கடற்படை தளத்தில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஹன்ட்ஸ்வில்லி என்ற இடத்தில், போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடந்த மோதலில், போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X