அமெரிக்க, 'எச் -- 1பி.,' விசா மின்னணு பதிவு அறிமுகம்

Added : டிச 08, 2019
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்க அரசு, 'எச் - 1பி.,' விசாவுக்கு பதிவு செய்யும் நடைமுறையை, மின்னணு முறைக்கு மாற்றி உள்ளது.அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களை பணியில் நியமிக்க வசதியாக, 'எச் - 1பி.,' விசா வழங்கப்படுகிறது.

ஒரு நிதியாண்டில், அதிகப்பட்சமாக, 65ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.எச் - 1பி., விசாவுக்கு, மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதாக, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, இத்துறையின் துணை இயக்குனர், மார்க் கோமன்ஸ் கூறியதாவது:இனி, 'எச் - 1பி.,' விசாவுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், மின்னணு முறையில் பதிவு செய்யும் வசதி அமலுக்கு வர உள்ளது. வரும், 2021ம் நிதியாண்டிற்கு, வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்த உள்ள நிறுவனங்கள், 2020, மார்ச் 1 - 20 வரை, எச் - 1பி., விசாவுக்கு மின்னணு முறையில் பதிவு செய்யலாம்.

பரிசீலனைக் கட்டணமாக, ஒரு விண்ணப்பத்திற்கு, 700 ரூபாய் வசூலிக்கப்படும். நிறுவனங்கள், அடிப்படை தகவலுடன், பணிக்கு அமர்த்த உள்ள வல்லுனரின் விபரங்களை மட்டும் அளித்தால் போதும். பரிசீலனைக்குப் பின், தேர்வு செய்யப்பட்டோர், 2020 ஏப்.,1 முதல், மின்னணு முறையில் 'எச் - 1பி.,' விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X