'சூப்பர் பவர் நாடாக இந்தியா மாறும்'

Added : டிச 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement

வாஷிங்டன்: 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது; 21ம் நுாற்றாண்டில், உலகளவில், 'சூப்பர் பவர்' நாடாக இந்தியா மாறுவதற்கு அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக உள்ளன' என, அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் ஹர்ஷ் வர்தன் சிருங்கலா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு கென்னடி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் சிருங்கலா பேசியதாவது:இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாட்டின் பொருளாதாரம், 70 லட்சம் கோடி ரூபாயாக உயருவதற்கு, 60 ஆண்டுகள் ஆனது.அதே நேரத்தில், 140 லட்சம் கோடி ரூபாயாக உயருவதற்கு, 12 ஆண்டுகள் ஆனது. கடந்த, 2014 - 2019 என, ஐந்து ஆண்டுகளில், 210 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வரும், 2025ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதை எட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி காணும் அதே நேரத்தில், அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.சமூக நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டம் போன்றவையும் முறையாக பேணி காக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அனைத்து தரப்பிலும், ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் காண, உலக நாடுகள் திணறி வருகின்றன. இதில், இந்தியா சீரான, பிரமிக்கதக்க வளர்ச்சியை கண்டு வருகிறது.உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது. அத்துடன் தனிநபர் வருவாயும் உயர்ந்து வருகிறது. அதனால், உலகின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.வரும், 2030ல், இரண்டில் ஒரு குடும்பம், நடுத்தர வர்க்கமாக இருக்கும். அப்போது, உயர் நடுத்தர வருவாய் நாடாக இந்தியா விளங்கும் என, உலக வங்கி கணித்துள்ளது.இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், 21ம் நுாற்றாண்டில், உலகின் சூப்பர் பவர் நாடாக இந்தியா மாறும். அதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

இந்தியா - அமெரிக்க உறவுநிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் ஹர்ஷ் வர்தன் சிருங்கலா மேலும் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பு, தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியா உள்ளது. அதேபோல், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவும் மிக வலிமையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

சீக்கிய அதிகாரிக்கு கவுரவம்அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் பணியாற்றி வந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, சீக்கிய போலீஸ் அதிகாரி, சந்தீப் சிங் தலிவால், இந்தாண்டு செப்., 27ல் பணியில் இருந்த போது கொல்லப்பட்டார். 'அவரை கவுரவிக்கும் வகையில், ஹூஸ்டனில் உள்ள ஒரு தபால் நிலையத்துக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும்' என, பெண் எம்.பி., லிஸ்ஸி பிளெட்சர், பார்லி.,யில் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
10-டிச-201900:42:44 IST Report Abuse
RS PRAKASH The super power 1.EUROPE SUPER POWER -FRANCE,GREAT BRITAIN2.ARTIC COUNTRIES SUPER POWER -RUSSIAN FEDRATION3.NORTH AMERICA
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
08-டிச-201919:37:27 IST Report Abuse
Believe in one and only God மோடி ஆட்சி கலைந்தால்
Rate this:
Share this comment
Cancel
MSN -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201916:34:18 IST Report Abuse
MSN vengayum vaanga engalukku vakkuilla..Ana mars la thanni irukka nu thedovom
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X