பொது செய்தி

இந்தியா

தொத்தல் வீடுகளில் மத்திய அமைச்சர்கள்

Added : டிச 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தொத்தல் வீடுகளில் மத்திய அமைச்சர்

இந்த செய்தியை கேட்க

டில்லியில், மத்திய அமைச்சர்களுக்கு, பார்லிமென்டிற்கு அருகே அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததுமே பரந்த புல்வெளி. ஒரு கல்யாணமே செய்யக் கூடிய அளவிற்கு பெரியது. பிறகு வரவேற்பறை. பங்களாவுக்குள் நிறைய அறைகள். இவற்றை தாண்டி பின்னால் போனால், மீண்டும் மிகப் பெரிய புல்வெளி. காலையில், 'வாக்கிங்' போக அமைச்சர்கள் வெளியே போக வேண்டியதில்லை. வீட்டிற்குள் புல்வெளியில் நடை பழகலாம்; அவ்வளவு பெரியது.மத்திய அமைச்சர்கள், இப்படி பிரமாண்டமான, வசதியான பங்களாக்களில் வசித்தாலும் அவர்கள் சந்தோஷமாக இல்லை. குறிப்பாக, சப்தர்ஜங் சாலையில் உள்ள பங்களாக்களில் வசிக்கும் அமைச்சர்கள் நொந்து போயுள்ளனர்.




நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட சில அமைச்சர்கள், இப்பகுதியில் உள்ள பங்களாக்களில் தான் வசிக்கின்றனர்.அமைச்சர்களின் கவலைக்கு காரணம், மழை பெய்தால் பல அறைகளில் நீர் ஒழுகுகிறது. மழை இல்லாத சமயங்களில், வீட்டின் மேலே வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கிலிருந்து ஒழுகல். இன்னொரு பக்கம், பல இடங்களில் சிமென்ட் பெயர்ந்து, விழுந்து கொண்டிருக்கிறது.

என்ன தான் ரிப்பேர் செய்தாலும், நீர் ஒழுகுவதும், சிமென்ட் விழுவதும் நிற்கவில்லை. மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின், சப்தர்ஜங் சாலையில் வசிக்கும் அமைச்சர்கள் ஒன்று கூடி, 'என்ன உங்கள் வீட்டில், நீர் ஒழுகுவது நின்றுவிட்டதா' என, விசாரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.

இந்த அமைச்சர்கள், தங்களைச் சந்திக்க வரும் வி.ஐ.பி.,க்கள் மற்றும் கட்சிக்காரர்களை வீட்டிற்கு அழைப்பது இல்லை. வீடு இருக்கும் நிலையில், அவர்களை எப்படி இங்கே அழைப்பது என வெறுத்துப் போய் சொல்கின்றனர். 'பொருளாதார பிரச்னைகளை எதிர் கொண்டு தீர்வு காணும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வீட்டுப் பிரச்னையை தீர்க்க முடியவில்லையே' என, சக அமைச்சர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-201909:26:52 IST Report Abuse
நக்கல் இந்த இடங்கள் யார் தலைமையில் கட்டப்பட்டது என்று பார்த்து ஆராய்ந்தால் அதில் இருக்கும் ஊழல் வெளிவரும்...
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Delhi,இந்தியா
08-டிச-201902:43:55 IST Report Abuse
Rajesh லஞ்சம் , ஊழலுக்கு பெயர் எடுத்த நாட்டில் அரசு கட்டிடங்கள் தரமற்று இருப்பவை அதிசயம் அல்ல .............
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
08-டிச-201908:44:19 IST Report Abuse
Darmavanஇது யார் காலத்தில் ஆரம்பித்தது /நடந்தது...
Rate this:
Share this comment
Rajan - Alloliya ,இந்தியா
08-டிச-201917:16:45 IST Report Abuse
Rajanகாங்கிரஸ் காலத்தில் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X