ஹபீஸ் சையது மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் தள்ளிவைப்பு

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஹபீஸ் சையது மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் தள்ளிவைப்பு

லாகூர்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த, ஜமா உத் தவா தலைவர், ஹபீஸ் சையது, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நெருக்கடியால், பாக்., அரசு, ஜமா உத் தவா அமைப்பை தடை செய்துள்ளது. அத்துடன், அந்த அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டது.நிதியுதவிஇந்நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு மேற்கொண்ட புலனாய்வில், ஹபீஸ் சையது மற்றும் அவருடைய துணை நிறுவனங்கள், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதும், நிதியுதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஹபீஸ் சையது மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட மாலிக் ஜபார் ஆகியோர், ஜூலை,17ல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது, 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வழக்குகள் தொடர்பாக, நேற்று, லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில், ஹபீஸ் சையது, மாலிக் ஜபார் ஆகியோர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆவணங்கள்இதையொட்டி, சிறையில் இருந்து, ஹபீஸ் சையத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், மாலிக் ஜபார் இக்பாலை போலீசார் ஆஜர்படுத்தவில்லை.இதன் காரணமாக, நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது. நேற்று முன்தினம், வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது:மும்பை தாக்குதலில் ஹபீஸ் சையதுக்கு உள்ள தொடர்பு குறித்த அனைத்து ஆவணங்களையும் பாக். கிடம் வழங்கியுள்ளோம்; இருந்தும், பாக்., அரசின் துணையுடன், ஹபீஸ் சையது சுதந்திரமாக நடமாடி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பு/வெள்ளை - Chennai,இந்தியா
08-டிச-201920:34:50 IST Report Abuse
கருப்பு/வெள்ளை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது...இந்தியா வேறு வழியில் இவனை தீர்த்துக்கட்ட வேண்டும் அதிவிரைவில் அது நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X